2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உறுதி

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி. டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டி வாள்வீச்சுப் பிரிவில் முதல் சுற்றில் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி தன்னால் முடிந்த வரைபோராடியதாகவும் தன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி பெற்று தடம்பதித்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் பவானி தேவி உலகின் நம்பர் 3 வீராங்கனை மனான் புருனேவிடம் 7-15 என்று போராடித் தோல்வி அடைந்தார்.

  பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர். இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  ஆனால் அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனான் புரூனேவுக்கு பவானி தேவி நல்ல ஃபைட் கொடுத்தார். ஆனாலும் முதன் முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெற்று கலக்கிய அளவில் பவானி தேவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது அடுத்த சுற்றில் தோல்வியடைந்தாலும் அவர் சவால் அளித்த விதத்தில் தெரிந்தது.

  BhavaniDevi
  சென்னையைச் சேர்ந்த பவானிதேவி


  2-8 என்று பின் தங்கியிருந்த பவானி தேவி பிறகு 5 புள்ளிகளைப் பெற்றார். பவானிதேவி பிரான்ஸ் வீராங்கனைக்கு சில நெருக்கடிகளைக் கொடுத்தார். ஆனால் அவர் உலக நம்பர் 3 வீராங்கனை, அதனால் அனுபவத்தினால் பவானி தேவியின் சவால்களை முறியடித்து காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

  சென்னையைச் சேர்ந்த பவானி தேவிக்கு வயது 27, இவரது பயிற்சியாளர் இத்தாலியைச் சேர்ந்த நிகோலா சனோட்டியாவார். இத்தாலியில் பயிற்சி பெற்று கடினமான பாதையில் பயணித்த பவானி தேவி 2009-ல் முதன் முதலில் வெண்கலம் வென்றார். 2010-ல் ஆசிய வாள்விச்சிலும் பதக்கம் வென்றார்.

  பவானி தேவி


  2017, 18-ல் ஐஸ்லாந்தில் இருமுறை வாள்வீச்சுப் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில் பவானி தேவி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

  நாட்டுக்காக ஒலிம்பிக்கில் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடிந்திருக்கலாம் என்ற அளவில் சிறு ஏமாற்றம். ஆனால் இது ஒலிம்பிக் அல்லவா நான் என் சிறந்த பங்களிப்பைச் செய்ததாகவே உணர்கிறேன்.

  பவானி தேவி


  2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன். மிக முக்கியமான பாடம் கற்றுக் கொண்டது 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில்தான். நான் தகுதி பெறாமல் போனேன், ஆனால் அதுதான் பெரிய உத்வேகத்தை அளித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த ஒலிம்பிக் எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. அதாவது கடின உழைப்பும், உறுதியும் இருந்தால் ஒலிம்பிக்கில் ஆட முடியும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

  ஒலிம்பிக்கிற்கு முன்னால் இத்தாலியில் பிரமாதமான சில வீரர்களுடன் பயிற்சி பெற்றது உதவிகரமாக இருந்தது. ஒவ்வொரு பயிற்சி அமர்வும் உயர் தர தீவிரத்துடன் இருந்தது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நல்ல தயாரிப்பில் இருந்தேன். முதல் போட்டியில் நன்றாக ஆடினேன், 2வது போட்டியிலும் நன்றாகத் தொடங்கினேன். எதிரில் ஆடியவர் பெரிய வீரர், ஆனால் நான் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம். ஆனால் நான் என்ன செய்தேனோ அதில் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.

  இவ்வாறு கூறினார் பவானி தேவி.
  Published by:Muthukumar
  First published: