Tokyo Olympics | ஒலிம்பிக் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு

கோப்புப் படம்

டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற 12-ந் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வருகிற 12-ந் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

    இது அடுத்த மாதம் 22-ந் தேதி வரை நீடிக்கும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க 2 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவசர நிலை கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

    அவசரநிலை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு முற்றிலும் அனுமதி இல்லை என்று ஜப்பான் ஒலிம்பிக் மந்திரி தமயோ மருகவா அறிவித்துள்ளார்.

    முன்னதாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டிைய பார்க்க ஸ்டேடியத்திற்குள் உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது அதுவும் இல்லை என்றாகி விட்டது. இந்த ஒலிம்பிக் திருவிழா ரசிகர்கள் இன்றி வித்தியாசமான முறையில் நடக்கப் போகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரசிகர்கள் வாங்கும் டிக்கெட் மூலம்  ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று போட்டி அமைப்பாளர்கள்  மதிப்பிட்டிருந்தனர். இனி டிக்கெட் வருவாய் இல்லை என்பதால் அந்த வகையில் ஒலிம்பிக் கமிட்டி பெருத்த இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யும் படி அங்கு மக்கள் தரப்பில் பெரும்பான்மையோர் கருத்து தெரிவிப்பதாக கருத்துக் கணிப்புகள் பல தெரிவிக்கின்றன..

    அரசியல் எதிர்க்கட்சிகளும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    Published by:Muthukumar
    First published: