• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics | கொரோனா பீதி: ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுங்கள்- ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

Tokyo Olympics | கொரோனா பீதி: ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுங்கள்- ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் 2021

டோக்கியோ ஒலிம்பிக் 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இப்போது நடத்த வேண்டாம் என்று ஜப்பானில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே 2021-க்கு ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை இப்போது நடத்த வேண்டாம் என்று ஜப்பானில் நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஜூலை 23ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 15,000 தடகள வீரர்கள், சுமார் 50,000 அதிகாரிகள், 70,000 உதவிப் பணியாளர்கள் ஒன்று கூடுகின்றனர்.

    இந்நிலையில் பொதுக்கருத்துக் கணிப்பில் 60% மக்கள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது, என்றும் சிலர் தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர், காரணம் டோக்கியோ நகரில் 10% மக்களுக்கே கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒரு இடத்தில் கூடுவது என்பது பெரிய ரிஸ்க் என்றும் கொரோனா பரவலும் இன்னும் குறையவில்லை என்றும் மக்கள் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ அசெம்ப்ளியின் 127 இடங்களுக்கான தேர்தலில் இந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்த தாக்கமும் கொரோனா அச்சமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கவர்னர் யுரிகோ கொய்கேவின் கட்சி 46 இடங்களிலிருந்து சரிந்து 31 இடங்களையே கைப்பற்றியுள்ளது. தேசத்தை ஆளும் சுதந்திர ஜனநாயகக் கட்சி 25 இடங்களிலிருந்து முன்னேறி 33 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது பற்றி கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 8 இடங்களிலிருந்து 15 இடங்கள் என்று அதிகமாக கைப்பற்றியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    டோக்கியோ கவர்னர், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தலாம் என்கிறார். டோக்கியோ நகரில் 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

    இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தினால் அது கொரோனாவை அதி தீவிரமாகப் பரப்பி விடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இது ஆயிரக்கணக்குக்கு எகிறும் என்று எச்சரித்துள்ளனர்.

    எனவே ஜப்பான் அரசியல் நிலைமகளையே கொரோனாவும் ஒலிம்பிக் போட்டிகளும் அங்கு தீர்மானிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: