‘சக் தே இந்தியா’: மகளிர் ஹாக்கி வெற்றி குறித்து கோச் உற்சாகம்

பயிற்சியாளருடன் வெற்றி வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி.

ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிச் சுற்றுக்கு முதன் முதலாகத் தகுதி பெற்றது, இதனையடுத்து சக் தே இந்தியா படத்துடன் இந்த வெற்றியை ஒப்பிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் ஹாலந்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சோயர்ட் மாரின்.

 • Share this:
  ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிச் சுற்றுக்கு முதன் முதலாகத் தகுதி பெற்றது, இதனையடுத்து சக் தே இந்தியா படத்துடன் இந்த வெற்றியை ஒப்பிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார் ஹாலந்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சோயர்ட் மாரின்.

  2007-ல் வந்து சக்கை போடு போட்டு வசூல் அள்ளிய ஹாக்கி விளையாட்டு குறித்த ஷாரூக் கான் நடித்த சக் தே இந்தியா திரைப்படம் இந்திய மகளிர் ஹாக்கி அணியை உலகக்கோப்பையை வெல்ல வழிநடத்திச் செல்வார் ஷாரூக் கான். அந்தப் படத்திலும் ஆஸ்திரேலியாவை இந்திய மகளிர் அணி வீழ்த்தி கோப்பையை வெல்லும். அந்த படத்தை இந்திய மகளிர் ஹாக்கி அணியின் இன்றைய கோச் சோயர்ட் மாரின் குறிப்பிட்டு நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

  சக் தே இந்தியா பாலிவுட் படம்


  “என் இருதயமா? இன்னும் வேலை செய்து கொண்டிருப்பது ஆச்சரியம்தான். ஒவ்வொரு ஆட்டமாக எடுத்துச் செல்வோம் என்றே திட்டமிட்டோம். அதாவது அடுத்த போட்டியில் என்ன முன்னேற்றம் காட்டப் போகிறோம், என்றே ஒவ்வொரு போட்டியிலும் திட்டமிட்டோம்.

  இதையும் படிங்க: Indian Hockey| சவிதா பூனியா; ஆஸ்திரேலியாவின் கனவுகளை முறியடித்த புதிய சுவர்

  தடுப்பாட்டம் குறிப்பாக கோலுக்கு அருகே சர்க்கிளில் நன்றாக இல்லை. அதனால் இந்த முறை அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். மேலும் இதில் கவனம் செலுத்தியதால் வெற்றி தோல்வி என்பதில் கவனம் செல்லவில்லை.

  எல்லாம் மனநிலையைப் பொறுத்ததே, நான் வீராங்கனைகளிடம் கூறியதெல்லாம் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எனவே சுதந்திரமாக ஆடுங்கள் என்றேன் அதைத்தான் இன்று செய்தோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கனவு நனவான தருணம், இது உண்மையில் நிகழ்ந்த சக் தே இந்தியா தான்” என்றார்.

  அரையிறுதியில் இந்தியா, வலுவான அர்ஜெண்டினாவைச் சந்திக்கிறது. ஏனெனில் ஜெர்மனியை 3-0 என்று அர்ஜெண்டீனா வீழ்த்தியுள்ளது. விறுவிறுப்பான டென்ஷன் அரையிறுதி காத்திருக்கிறது.
  Published by:Muthukumar
  First published: