ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: சரத் கமல் அபாரம்: 3வது சுற்றுக்கு முன்னேறினார்

அசந்தா சரத் கமல்-டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு இந்தியாவின் சரத் கமல் தகுதி பெற்றார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு இந்தியாவின் சரத் கமல் தகுதி பெற்றார்.

  அன்று கலப்பு இரட்டையரில் சரத் கமல்-மனிகா பத்ரா ஜோடி தோற்று வெளியேறியதையடுத்து ஒற்றையரில் தற்போது சரத் கமல் 3வது சுற்றுக்கு முன்னேறினார். நேற்று மனிகா பத்ரா உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு ஒற்றையர் பிரிவில் முன்னேறினார்.

  ஆனால் 3வது சுற்றிலேயே சாம்பியன் வீரர் மா லாங் என்பவரை சந்திக்கிறார் சரத் கமல்.

  Also Read: Tokyo Olympics 2020| ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

  போர்ச்சுகல் வீரர் தியாகோ அபலோனியாவை சரத் கமல் 2-11 11-8 11-5 9-11 11-6 11-9 என்று வீழ்த்தினார், அதாவது 7 செட்களில் தீர்மானிக்கப்படும் ஆட்டத்தில் சரத் கமல் 4-2 என்று வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுவரை வந்து விட்டார், ஆனால் அடுத்து உலக சாம்பியன் லாங்கை சந்திக்கிறார். டேபிள் டென்னிஸின் உலக நட்சத்திரமான லாங் ஒவ்வொரு சிங்கிள்ஸ் போட்டியையும் வென்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஜி.சத்யன் நேற்று டேபிள் டென்னிஸில் நல்ல நிலையிலிருந்து தோற்று வெளியேறினார். இன்று மனிகா பத்ரா அடுத்த சுற்றில் ஆடுகிறார்.
  Published by:Muthukumar
  First published: