• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வரலாற்று வெண்கலப் பதக்கம் கொரோனா போராளிகள், முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு: இந்திய ஹாக்கி கேப்டன் அறிவிப்பு

வரலாற்று வெண்கலப் பதக்கம் கொரோனா போராளிகள், முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு: இந்திய ஹாக்கி கேப்டன் அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன்

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன்

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டியில் ஜெர்மனியை 5-4 என்று வீழ்த்திய இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது, இந்த வரலாற்று வெற்றி வெண்கலப்பதக்கத்தை கொரோனா போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் அறிவித்தார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டியில் ஜெர்மனியை 5-4 என்று வீழ்த்திய இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது, இந்த வரலாற்று வெற்றி வெண்கலப்பதக்கத்தை கொரோனா போராளிகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் அறிவித்தார்.

    1972 ஒலிம்பிக்கில் கடைசியாக வெண்கலம் வென்றது, 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் கடைசியாக இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. இப்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலம் வென்று 41 ஆண்டுகால பதக்கக் கனவை நிறைவேற்றியது.

    வெற்றி பதக்கம் சாதித்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் கூறும்போது, “இந்தப் பதக்கம் அனைத்து கொரோனா போராளிகள் மற்றும் கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது” என்றார். இந்த நெகிழ்ச்சித் தருணத்தை நெகிழ்ச்சிமிக்க தருணமாக கோவிட் போராளிகள், முன்களப் பணியாளர்களை நினைவில் கொண்டு சமர்ப்பணம் செய்தமைக்காக இந்திய கேப்டன் மன்பிரீத் சிங்குக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இதையும் படிங்க: Hockey| India wins Bronze : அந்த 7 நிமிடங்கள்: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றுத் தருணம் மலர்ந்த கதை: அற்புதன் ஸ்ரீஜேஷின் கடைசி விநாடி சேவ்

    இது இந்தியாவின் 3வது ஒலிம்பிக் ஹாக்கி வெண்கலமாகும். 1968-ல் மெக்சிகோ நகரத்திலும் 1972-ல் மியூனிக் ஒலிம்பிக்கிலும் பெற்றது.

    இந்தியா தரப்பில் சிம்ரன் ஜித் சிங் (17, 34வது நிமிடம்), ஹர்திக் சிங் (27வது நிமிட பீல்ட் கோல்), ஹர்மன்பிரீத் சிங் (29வது), ருபீந்தர் பால் சிங் (31) என்று கோல்களை அடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜெர்மனிக்கு தைமூர் ஓருஸ், நிகலஸ் வெலன், பெனடிக்ட் ஃபர்க், லூகாஸ் விண்ட் பெடர் ஆகியோர் கோல்களை அடித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: