Tokyo Olympics: ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி பதவி: ரயில்வே சார்பில் ரூ.2 கோடி பரிசு

ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானு.

ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்து நாட்டுக்கே பெருமை சேர்த்த ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி. பதவி அளிக்கப்ப்ட்டுள்ளது.

  • Share this:
    ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்து நாட்டுக்கே பெருமை சேர்த்த ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி. பதவி அளிக்கப்ப்ட்டுள்ளது.

    மேலும் ரயில்வே சார்பில் அவருக்கு ரூ.2 கோடி பரிசு அளிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டியி்ல் வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முன்புவரை ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராகத்தான் மீராபாய் சானு பணியாற்றி வந்தார். இந்நிலையில் விளையாட்டுப்பிரிவி்ல் காவல்கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.

    வெள்ளி மங்கை மீராபாய் சானு


    உங்கள் வாசிப்புக்காக: Tokyo Olympics Mirabai Chanu| மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார், இதயங்களையும் வென்றார்!

    கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒலிம்பிக் வெள்ளி வென்று சாதனை படைத்த மீராபாய் சானு.


    மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

    Also Read: 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி உறுதி

    இந்நிலையில் டோக்கியோவிலிருந்து மீராபாய் சானு நேற்று தாயகம் திரும்பினார். மணிப்பூர் சென்ற சானுவுக்கு அந்த மாநில மக்கள் உற்சாகமான வரவேற்பு அளிக்க காத்திருக்கின்றனர். அதோடு முதல்வர் பிரேன் சிங் மேற்கொண்ட அறிவிப்பில், ““ மீராபாய் சானு தற்போது செய்துவரும் ரயில்வே துறையில் இருக்கும் பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். அவருக்கு மணிப்பூர் அரசு சார்பில் போலீஸ் துறையில் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக(விளையாட்டுக்கோட்டா) பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சானு இனிமேல் மணிப்பூர் போலீஸ் துறையில் இணைந்து பணியாற்றலாம். அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தேவையான பயிற்சிகளை மேற்கொண்டு தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிக்கலாம்.” என்றார்.
    Published by:Muthukumar
    First published: