• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டேபிள் டென்னிஸ்: ஆல் டைம் கிரேட் சீன வீரரை கதிகலக்கிய சரத் கமல் போராடி தோல்வி

டேபிள் டென்னிஸ்: ஆல் டைம் கிரேட் சீன வீரரை கதிகலக்கிய சரத் கமல் போராடி தோல்வி

டேபிள் டென்னிஸ், டோக்கியோ ஒலிம்பிக் சரத் கமல் போராடித் தோல்வி

டேபிள் டென்னிஸ், டோக்கியோ ஒலிம்பிக் சரத் கமல் போராடித் தோல்வி

சீன வீரர் மா லாங் உலக சாம்பியன், தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளவர். இந்தியாவின் சரத் கமல் 20வது இடத்தில் உள்ளவர். எனவே நோ-மேட்ச் என்பார்களே அதுதான் இந்தப் போட்டி, ஆனால் ஆட்டத்தில் சரத் கமல் தைரியம் காட்டி சில சமயங்களில் வெளுத்து வாங்கி மா லாங்கிற்கு பீதியைக் கிளப்பினார்.

  • Share this:
    ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் சற்று முன் ஆல் டைம் கிரேட் வீரர் என்று கருதப்படும் சீன வீரர் மா லாங்கிற்கு எதிராக இந்தியாவின் சரத் கமல் தோற்றாலும் அட்டகாசமாக ஆடினார்

    சீன வீரர் மா லாங் உலக சாம்பியன், தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளவர். இந்தியாவின் சரத் கமல் 20வது இடத்தில் உள்ளவர். எனவே நோ-மேட்ச் என்பார்களே அதுதான் இந்தப் போட்டி, ஆனால் ஆட்டத்தில் சரத் கமல் தைரியம் காட்டி சில சமயங்களில் வெளுத்து வாங்கி மா லாங்கிற்கு பீதியைக் கிளப்பினார்.

    சீன வீரர் மா லாங் 4-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார், முதல் செட்டில் மா லாங் 11-7 என்று வென்றார். ஆனால் இரண்டாவது செட்டில் இந்திய வீரர் சரத் கமல் சில அபாரமான ஃபோர் ஹேண்ட் ஷாட், பேக் ஹேண்ட் ஷாட், வாலி ஷாட்கள் மூலம் சீன வீரர் மா லாங்குக்கு அதிர்ச்சியளித்து செட்டை 11-8 என்று கைப்பற்றினார். அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் 2வது செட்டில் சரத் கமல் 8-4 என்று முன்னிலை வகித்தார், இந்த சீன வீரரை இதுவரை யாரும் 4 புள்ளிகள் முன்னிலை பெற்றதில்லையாம்.

    Also Read: Tokyo Olympics Hockey |ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெற்றி! ஸ்பெயினை வீழ்த்தியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியின் மன பாரம் குறைந்தது

    2வது செட்டில் சரத் கமல் 8-4 என்று முன்னில வகித்தாலும் மா லாங் சும்மா விடுவாரா? சரத் கமலின் பேக் ஹேண்டைக் குறிவைத்து ஷாட்களை ஆடி 4 புள்ளிகளை தொடர்ச்சியாக பெற்றார். 8-8 என்று சமன் ஆனது. அதன் பிறகு சரத் கமல் சில அபாரமான ஃபோர்ஹேண்ட் ஷாட்களை ஆடி 2வது செட்டை 11-8 என்று கைப்பற்றினார்.

    இந்த ஆட்டத்தின் மிகச்சிறந்த செட் என்று 3வது செட்டை கூறலாம். இருவரும் மாறி மாறி வென்று ஆட்டம் இருவருக்கும் சமநிலையிலேயே சென்றது. 11-11 என்று கூட டஃப் பைட் கொடுக்கப்பட்டது. ஆனால் சரத் கமல் இரண்டு தவறுகளை இழைக்க மா லாங் 13-11 என்று மூன்றாவது செட்டைக் கைப்பற்றினார்.

    இவ்வளவு நெருக்கமாக வந்து விட்டு செட்டை கைவிட்டதால் சரத் கமல் சற்றே மனம் தளர்ந்திருப்பார், மா லாங்கின் உத்வேகம் கூடியது, 4வது செட்டில் மா லாங் 6-0 என்று முன்னிலை பெற்றார். சரத் கமல் ஆட்டத்தை முறியடித்த மா லாங் செட்டை 11-4 என்று கைப்பற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    5வது ஆட்டம் 6 நிமிடங்களில் 11-4 என்று சீன வீரர் சார்பில் முடிந்தது. ஆகவே சீன வீரர் மா லாங் 11-7, 8-11, 13-11, 11-4, 11-4 என்ற செட்களில் 46 நிமிடங்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார், சரத் கமல் வெளியேறினார்.

    ஆனால் சரத் கமல் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்து விடவில்லை என்பதே உண்மை. போராடினார், ஆனால் உலகின் ஆல் டைம் கிரேட் வீரரை வெல்ல முடியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: