• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Indian Hockey| சவிதா பூனியா; ஆஸ்திரேலியாவின் கனவுகளை முறியடித்த புதிய சுவர்

Indian Hockey| சவிதா பூனியா; ஆஸ்திரேலியாவின் கனவுகளை முறியடித்த புதிய சுவர்

ஆஸி. கோல் முயற்சியை அனாயாசமாகத் தடுக்கும் சவிதா பூனியா.

ஆஸி. கோல் முயற்சியை அனாயாசமாகத் தடுக்கும் சவிதா பூனியா.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில் ‘சுவர்’ என்ற வார்த்தைக்கே புதிய விளக்கமாகத் திகழ்ந்தவர் இந்திய கோல் கீப்பிங் வீராங்கனை சவிதா பூனியா என்றால் மிகையாகாது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் வலுவான ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதில் ‘சுவர்’ என்ற வார்த்தைக்கே புதிய விளக்கமாகத் திகழ்ந்தவர் இந்திய கோல் கீப்பிங் வீராங்கனை சவிதா பூனியா என்றால் மிகையாகாது.

    ஒலிம்பிக் ஹாக்கி இந்திய மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார், இதுவே வெற்றி கோலாக அமையும் என்று அவர் அப்போது கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

    ஆனால் ஆட்டத்தின் நாயகி, ஹீரோயினி, கதாநாயகி யார் என்றால் இந்திய கோல் கீப்பர் சவிதா பூனியாதான். இவர் இல்லையெனில் 3 முறை சாம்பியன்களான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்க முடியாது, வரலாறும் படைத்திருக்க முடியாது.

    புதிய சுவர் கோல் கீப்பர் சவிதா பூனியா.


    Also Read: Tokyo Olympics| வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி: முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி

    ஆஸ்திரேலிய அணியினால் இந்தியாவின் 1 கோலை சமன் செய்ய முடியவில்லை, ஆனால் அலை அலையாகத் தாக்குதல் நடத்தியும் இந்திய கோல் கீப்பர் சவிதா பூனியாவின் அபார தடுப்புத் திறனினால் சுவர் என்பதற்கே புதிய விளக்கமாகத் திகழ்ந்தார்.

    அன்று ஆடவர் ஹாக்கி காலிறுதியில் எப்படி கிரேட் பிரிட்டனின் தாக்குதலை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் மாறி மாறி முறியடித்தாரோ அதே போல் சவிதா பூனியா 8 முறை பெனால்டி கார்னர் வாய்ப்புகளை ஆஸ்திரேலியாவின் கோலாக மாறாமல் தடுத்து ஆட்கொண்டார்.

    சமூக வலைத்தளங்களில் சவிதா பூனியாவை ‘புதிய சுவர்’ என்றே அழைக்கத் தொடங்கி விட்டனர்.

    ரியோ ஒலிம்பிக் 2016 குறித்த இனிய நினைவுகள் சவிதா பூனியாவுக்கு இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஒலிம்பிக்கில் தகுதி பெற்றாலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி மறக்க வேண்டிய தொடராக குரூப் ஸ்டேஜிலேயே தோற்று வெளியேறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    “ரியோ கடந்த காலம் ஆகிவிட்டது, டோக்கியோவில் பதக்கத்துடன் வெற்றி வாகை சூட முயற்சி செய்து வருகிறோம். இந்த அணியிடம் ஆழமான தன்னம்பிக்கை உள்ளது. இந்த இந்திய வீராங்கனைகள் குறிப்பிட்ட நாளில் எந்த டாப் அணியையும் வீழ்த்தும் திறன் கொண்டது. எங்களுக்கு பயம் என்பது கிடையாது” என்கிறார் புதிய சுவர் சவிதா பூனியா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: