Tokyo Olympics| இந்திய பேட்மிண்டன் அணியின் சோகம்: வென்றும் காலிறுதிக்கு தகுதி இல்லை- ஏன் தெரியுமா?

வெற்றி பெற்றும் காலிறுதிக்கு தகுதி பெறவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி பிரிட்டன் ஜோடியை வீழ்த்தியது, ஆனாலும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி பிரிட்டன் ஜோடியை வீழ்த்தியது, ஆனாலும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

    பிரிட்டன் ஆடவர் இரட்டையர் ஜோடி பென் லேன், சான் வெண்டி ஆகியோரை இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-9 என்று நேர் செட்களில் வென்றது.

    ஆனாலும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை, காரணம், இதற்கு முன்னதாக நடைபெற்ற இரட்டையர் போட்டியில் சைனீஸ் தைபே அணியின் ஆடவர் ஜோடி லீ யாங், சீ-லின் வாங் ஜோடி வெற்றி பெற்றதால் இந்திய ஜோடி வெற்றி பெற்றும் காலிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

    Also Read: Tokyo Olympics: ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி பதவி: ரயில்வே சார்பில் ரூ.2 கோடி பரிசு

    Also Read: டேபிள் டென்னிஸ்: ஆல் டைம் கிரேட் சீன வீரரை கதிகலக்கிய சரத் கமல் போராடி தோல்வி

    இதற்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது. 13-21, 12-21 என்று சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசியாவின் கெவின் சஞ்சயா - பெர்னால்டி கிடியன் ஜோடியிடம் தோல்வி கண்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இந்த இந்தோனேசிய ஜோடியான கெவின் சஞ்சயா-கிடியன் ஜோடியை சீன தைபே ஜோடியான யாங் லீ - சீ லின் வாங் ஜோடி வீழ்த்தியது. இதனால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறாமல் போனது.

    இந்தோனேசியா ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியிருந்தால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியிருக்கும். இது ஒரு துரதிர்ஷ்டமே.
    Published by:Muthukumar
    First published: