India vs Belgium:  துயரமான நாள்: கடைசி 15 நிமிடத்தில் சரிவு கண்ட இந்திய ஹாக்கி அணி- வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்பு

இந்திய ஹாக்கி நட்சத்திரம் மந்தீப் சிங்.

உலக சாம்பியன் பெல்ஜியம் அணிக்கு எதிராக இந்திய ஆடவர் ஹாக்கி அணி டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவினாலும் வெண்கலப்பதக்க வாய்ப்பு இன்னும் பிரகாசமாக உள்ளது.

  • Share this:
கடைசி 15 நிமிடங்களில் இந்திய அணியின் முக்கிய வீர்ர் ஹர்மன்பிரீத் சிங் பச்சை அட்டை காட்டப்பட்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்டதையடுத்து இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது, கடைசியில் எப்படியாவது கோலை அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் கோலை காலியாக விட்டு விட்டு இன்னொரு வீரரை கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு பதிலாக இறக்கிப் பார்த்தது இந்திய அணி ஆனால் இது பெல்ஜியத்தின் 5வது கோல் காலி கோலில் போடப்பட்டதே தவிர இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய கேப்டன் மன்ப்ரீத் சிங் வெண்கலப்பதக்கம் வெல்ல பாடுபடுவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளார். ஆஸ்திரேலியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதியில் தோல்வியடையும் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப்பதக்கப் போட்டியில் ஆட வேண்டும்.மன்ப்ரீத் சிங் கூறும்போது, இது துக்கமான நாள், ஆனால் அதற்காக விட்டுக் கொடுக்க மாட்டோம் வெண்கலப்போட்டிக்கு கடுமையாக தயாரிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

உலக சாம்பியன் பெல்ஜியத்துக்கு எதிராக டைட்டாக ஆட வேண்டிய இந்திய அணி 14 பெனால்டி வாய்ப்புகளை பெல்ஜியத்துக்கு அளித்தது, இதுதான் போட்டியை இழக்க நேரிட்டது. அதுவும் உலக நம்பர் ட்ராக் பிளிக்கர் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் இருக்கும் போது வரிசையாக அவர்களுக்கு பெனால்டி வாய்ப்பு கொடுத்தால் ஸ்ரீஜேஷ் எவ்வளவுதான் தடுக்க முடியும், ஹென்றிக்ஸ் அசுர வேகத்தில் பெனால்டி ஷாட்டை அடிக்கிறார்.

Also Read: டோக்கியோ ஓலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி: இறுதியில் பெல்ஜியம்
 ஹென்றிக்ஸ் பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் 3-ஐ கோலாக மாற்றி ஹாட்ரிக் கோல்களை அடித்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 2-1 என்று தொடக்க ஆதிக்கத்தில் இருந்தது, பிறகு ஆட்டம் 2-2 என்று சமன் ஆகி இருந்தது. 3வது கால் மணி நேர ஆட்டம் வரை இந்தியாவுக்கு எல்லாம் சரியாக இருந்தது.ஆனால் கடைசி 15 நிமிட நேர ஆட்டம் இந்தியாவுக்கு அனைத்தும் தவறானது, கோடிக்கணக்கானோர் பார்த்துக் கொண்டிருந்த இந்த ஆட்டத்தின் தங்கப் பதக்க கனவு சிறுகச் சிறுக தகர்ந்தது.

2வது நிமிடத்தில் அருமையான பீல்ட் கோல் அடித்த மந்தீப் சிங் இது பற்றி கூறியபோது, உலக சாம்பியன்கள் பெல்ஜியத்துக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகள் செய்தோம். ஆனால் வெண்கல வாய்ப்பை நழுவ விட மாட்டோம். ஆகஸ்ட் 5ம் தேதி வெண்கலப் போட்டிக்கு இப்போதிலிருந்தே தயாரிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

“இது துயரமான நாள். தோற்று விட்டோம் ஆனால் வெண்கலப்பதக்க போட்டி இன்னும் உள்ளது. அதற்குத் தயார்ப் படுத்திக் கொள்வோம். முக்கியமான மேட்சை தோற்று விட்டோம், பெரிய தவறுகளை இழைத்தோம். அதுவும் கோல் அருகே சர்க்கிளுக்குள் ஏகப்பட்ட தவறுகளை செய்தோம். வெண்கலப் போட்டியில் எங்கள் சிறந்த பங்களிப்பைச் செய்வோம். ஒருநாள், ஒரு மேட்ச் உள்ளது, எனவே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒருவரை ஒருவர் ஊக்குவித்து ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்போம்” என்றார் மந்தீப் சிங்.

டோக்கியோ ஒலிம்பிக்


பெனால்டி கார்னர் வாய்ப்புகள் பெல்ஜியம் அணிக்கு கடைசியில் சரமாரியாகக் கிடைத்தது, ஸ்ரீஜேஷ் ஓரளவுக்கு தடுக்க முடிந்தது ஆனால் தோல்வியை தடுக்க முடியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் 19, 49, 53ம் நிமிடங்களில் 3 கோல்களை அடித்து இந்த தொடரின் ஹாட்ரிக்கை நிகழ்த்தினார், மேலும் இந்தத் தொடரில் அதிக கோல்களை அடித்தவரும் ஹென்றிக்ஸ்தான்.

செட்-பீஸ் என்று சொல்வார்களே அதை பெல்ஜியம் திறம்பட கையாண்டது, இந்திய அணி அதை முறியடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் பெல்ஜியம் வீரர் ஒருவர் வலது புறம் சுதந்திரமாக தனியாக விடப்பட்டார், மார்க் செய்யப்படவில்லை அவர் அடித்த ஷாட் மூலம் ஏற்பட்ட சரமாரி பெனால்டி கார்னர் வாய்ப்புகளினால் ஆட்டம் திசைமாறிப்போனது. ஸ்ரீஜேஷ் கூறியது போல் சில கோல் வாய்ப்புகளை இந்திய அணியும் நழுவ விட்டது. ஆனால் எப்படிப் பார்த்தாலும் கடைசி 15 நிமிடங்கள் வரை இரு அணிகளும் உயர்தர ஹாக்கி ஆட்டத்தை வெளிப்படுத்தின.
Published by:Muthukumar
First published: