• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics| டோக்கியோ ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் பங்கேற்பு

Tokyo Olympics| டோக்கியோ ஒலிம்பிக்ஸில் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் பங்கேற்பு

ஒலிம்பிக்ஸில் ரோஜர் பெடரர்

ஒலிம்பிக்ஸில் ரோஜர் பெடரர்

இம்மாதம் 23ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான சுவிட்சர்லாந்து டென்னிஸ் அணியில் ரோஜர் பெடரர் இடம்பெற்றுள்ளார்.

  • Share this:
    ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக ஆடுகிறார், இது இவரது 3வது ஒலிம்பிக் பங்கேற்பாகும்.

    20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்த ரோஜர் பெடரர், காயத்திலிருந்து மீண்டார், ஆனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிலிருந்து பாதியிலேயே விலகினார். தற்போது விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று ஆடிவருகிறார்.

    ஒலிம்பிக் முடியும் போது ரோஜர் பெடரர் வயது 40-ஐ எட்டியிருக்கும். பீஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக் போட்டிகளில் வாவ்ரிங்காவுடன் இணைந்து இரட்டையரில் தங்கம் வென்றார்.

    2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெள்ளி வென்றார் ரோஜர் பெடரர். பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரேயிடம் பெடரர் அப்போது தோற்றார். 2016 ரியோ டி ஜெனிரியோ ஒலிம்பி போட்டிகளில் முழங்கால் காயம் காரணமாக பெடரர் ஆடவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுவிஸ் மகளிர் டென்னிஸ் ஒலிம்பிக் அணியில் பெலிந்தா பென்சிச், விக்டோரியா கொலுபிச் ஆகியோர் உள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் ஆட்டம் ஜூலை 24ம் தேதி தொடங்குகின்றன. 2016-ல் 105 சுவிஸ் வீரரக்ள் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டனர்.

    Also Read: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த அனில் கும்ப்ளே

    விம்பிள்டனில் ஆடி வரும் பெடரர் முதல் சுற்று போட்டியில் அட்ரியன் மனாரினோவிடம் தோல்வி அடைந்திருப்பார், எப்படியோ வென்றார் என்று தான் கூற வேண்டும் இப்போது 4வது சுற்றில் லாரென்சோ சொனேகோ என்பவரைச் சந்திக்கிறார். 2வது சுற்றில் பிரெஞ்சு வீரர் காஸ்கேயை நேர் செட்களிலும், 3வது சுற்றில் கேமரான் நாரி என்பவரை 4 செட்கள் ஆடி போராடி வென்றார் ரோஜர் பெடரர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: