Tokyo Olympics 2020: ஒலிம்பிக் -நம்பிக்கையளிக்கும் பிவி சிந்து!

கோப்புப் படம்

தொடக்கம் முதலே  பி.வி. சிந்துவே ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு  புள்ளிகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்துகொண்ட சிந்து, அடுத்தடுத்த புள்ளிகளை தனதாக்கினார்.  இதனால் 13 நிமிடங்களிலேயே முதல் செட்டை 21-7 என சிந்து கைப்பற்றினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து  அடுத்த ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து டோக்யோ ஒலிம்பிக்கை வெற்றிக் கணக்கோடு தொடங்கியுள்ளார். மகளீர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியின்  முதல் லீக் ஆட்டத்தில் இஸ்ரேலின் பொலிகர்போவாவை  பி.வி.சிந்து எதிர்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடக்கம் முதலே  பி.வி. சிந்துவே ஆதிக்கம் செலுத்தினார். முதல் இரண்டு  புள்ளிகளை இழந்தாலும் பின்னர் சுதாரித்துகொண்ட சிந்து, அடுத்தடுத்த புள்ளிகளை தனதாக்கினார்.  இதனால் 13 நிமிடங்களிலேயே முதல் செட்டை 21-7 என சிந்து கைப்பற்றினார்.

     இதையும் படிங்க: டோமினிகா வீராங்கனையை எளிதில் வீழ்த்திய மேரி கோம்!


    29 நிமிடங்களில் இரண்டாவது செட்டிலும் 21-10 என எளிதில் வென்றார். தனது அடுத்த ஆட்டத்தில்  ஹாங்காங் வீராங்கனை சியுங் ந்கன் யி உடன் மோதவுள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லுவார் என எதிர்பார்க்கப்படும் பட்டியலில் முதலில் இருப்பவர் பி.வி. சிந்து. கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதிப் போட்டிவரை முன்னேறிய சிந்து, எசுப்பானியா வீராங்கனை கரோலினா மாரினிடம் தோல்வி அடைந்தார். வெள்ளி பதக்கம் வென்றபோதும், ஒட்டுமொத்த தேசமும் அவரை தங்க மங்கையாகவே கொண்டாடியது.

    மேலும் படிக்க: டோக்கியோ ஒலிம்பிக்: அதிர்ச்சியளித்த இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள்!


    தற்பொது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் முக்கிய வீரர், வீராங்கனைகளின் கடும் முயற்சிகள் வெற்றியாக மாறாத நிலையில், பதக்க வேட்கையை பி.வி. சிந்து நிச்சயம் தணிப்பார் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

     

     
    Published by:Murugesh M
    First published: