ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பி.வி.சிந்து அபாரம்... ஒலிம்பிக் பேட்மிண்டன் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி

பி.வி.சிந்து அபாரம்... ஒலிம்பிக் பேட்மிண்டன் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி

 பி.வி.சிந்து!

பி.வி.சிந்து!

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் ஆட்டத்தில் ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முந்திய சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

  ஹாங்காங் வீராங்கனை சுயென் கான் யீ என்பவரை சிந்து 21-9, 21-16 என்று நேர் செட்களில் சாத்தி எடுத்தார். அடுத்த சுற்றில் இவர் மியா பிளிக்பெல்ட் என்ற வீராங்கனையைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

  Also Read: Tokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்

  இன்றைய போட்டியில் பி.வி.சிந்துவை நிறுத்த முடியவில்லை. தரவரிசையில் ஒலிம்பிக்சில் 6ம் இடம் வழங்கப்பட்ட சிந்து, ஹாங்காங் வீராங்கனையை 30 நிமிடங்களில் ஊதித்தள்ளினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read: Tokyo Olympics | ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்

  இதன் மூலம் குரூப் ஜே-வில் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். இதுவரை ஒரு கேமில் கூட தோற்கவில்லை. ஞாயிறன்று முதல் போட்டியில் சீனியா போலிகர்போவாவை வீழ்த்தினார். 2 போட்டிகளில் 2-லுமே வென்று 4 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று இறுதி 16 நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

  Also Read: ஒலிம்பிக் லைவில் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்த கோச்.. துள்ளிக்குதித்த வீராங்கனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

  டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பேட்மிண்டனில் பி.வி.சிந்து மட்டுமே இதுவரை பதக்க நம்பிக்கை அளித்து வருகிறார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: P.V.Sindhu, Tokyo Olympics