PV Sindhu | பி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்: வெள்ளி வென்ற தைவான் வீராங்கனை உருக்கம்

சூ யிங்- பி.வி.சிந்து.

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் தைவான் வீராங்கனை டை சூ இங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டிக்குப் பின்னர் தன்னை இந்திய வீராங்கனை சிந்து ஊக்குவித்து தேற்றினார் இது என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் பிரிவில் தைவான் வீராங்கனை டை சூ இங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டிக்குப் பின்னர் தன்னை இந்திய வீராங்கனை சிந்து ஊக்குவித்து தேற்றினார் இது என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    சீனாவின் சென் யூஃபீய் இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

    இத்தனைக்கும் தய்வான் வீராங்கனை டை சூ இங் தான் உலக சாம்பியன் ஆவார். ஆனால் சீன வீராங்கனை சென் யூஃபீய் இவரை 21-18, 19-21, 21-18 என்று வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

    இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர், ஸ்மாஷ்கள், வாலிகள் அருமையான சர்வ்கள் என்று கடும் போட்டி நிலவியது. சவால் நிறைந்த நீண்ட ராலிகள் என்று ஆட்டம் உயர் தர பாட்மிண்டனாக கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

    Also Read: PV Sindhu | அரையிறுதி தோல்விக்கு பின்னர் சிந்து கண்ணீருடன் பேசினார்.. தந்தை நெகிழ்ச்சி...

    பதக்க விழாவுக்குப் பிறகு டாய் சூ இங் எப்படி பி.வி.சிந்துவின் ஊக்கமான ஆறுதல் வார்த்தைகள் தன்னை அழவைத்தன என்பதை விவரித்தார்.

    “பி.வி.சிந்து என்னைக் கட்டித் தழுவி, உனக்கு உடல் நலம் சரியில்லை என்பது தெரியும், ஆனாலும் பிரமாதமாக ஆடினாய். ஆனால் இந்த நாள் உன் நாள் அல்ல, அவர் என்னை தன் கைகளில் ஏந்தி தனக்கு எல்லாம் தெரியும் என்றார், இத்தகைய உண்மையான வார்த்தைகள் என்னை அழ வைத்து விட்டது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்துக்குப் பிறகு டோக்கியோ ஓலிம்பிக்கில் அருமையாக ஆடி வெண்கலம் வென்றார். சீனாவின் இடது கை வீராங்கனை பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெண்கலம் வென்றார் சிந்து.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வென்ற பிறகு சிந்து கூறும்போது, “நாட்டுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அத்தனை சுலபமல்ல” என்றார். இந்தியர்கள் தனக்கு அளித்த அன்பும் ஆதரவும் தன்னை பதக்கம் வெல்ல வைத்தது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
    Published by:Muthukumar
    First published: