முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒலிம்பிக் வில்வித்தை: உலகின் நம்பர் 1 வீரரிடம் போராடித் தோற்றார் பிரவின் ஜாதவ்

ஒலிம்பிக் வில்வித்தை: உலகின் நம்பர் 1 வீரரிடம் போராடித் தோற்றார் பிரவின் ஜாதவ்

பிரவின் ஜாதவ்- இந்திய வில்வித்தை வீரர்

பிரவின் ஜாதவ்- இந்திய வில்வித்தை வீரர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் வில்வித்தைப் போட்டியின் ரவுண்ட் 16 எலிமினேஷன் சுற்றில் உலகின் நம்பர் 1 அமெரிக்க வீரர் பிராடி எலிசனிடம் இந்தியாவின் பிரவின் ஜாதவ் 0-6 என்று தோல்வி கண்டு வெளியேறினார்.

  • Last Updated :

உலகின் நம்பர் 2 ரஷ்ய வீரர் கல்சான் பசார்கபோவை 6-0 என்று வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு நுழைந்த பிரவின் ஜாதவ், முழு தன்னம்பிக்கையுடன் வந்தார். இதனால் முதல் செட்டில் 9,8,10 என்று இலக்கை தாக்கி 27 புள்ளிகள் எடுத்தார். இரண்டாவது செட்டில் பிரவின் ஜாதவ் 10,9,7 என்று மூன்றாவது அம்பு ரிலீஸில் அவசரப்பட்டு 7 புள்ளிகள் இலக்கை அம்பு தாக்க ஏமாற்றமடைந்தார்.

பிறகு 3வதில் இருமுறை 8 புள்ளிகள் இலக்கை அடித்த பிரவின் ஜாதவ் அடுத்ததாக 7 புள்ளிகள் இலக்கை தாக்கி கடும் ஏமாற்றமடைந்தார்.

மாறாக உலக நம்பர் 1 அமெரிக்க வீரர் பிராடி எலிசன் முதல் செட்டில் 9,10,9, இரண்டாவது செட்டில் 8, 10, 9 என்று புள்ளிகள் பெற்றார். கடைசி செட்டில் இவர் 26 புள்ளிகளை எடுக்க பிரவீன் ஜாதவ் 23 புள்ளிகளையே எடுத்து தோல்வி தழுவினார்.

Also Read: டோக்கியோ ஒலிம்பிக் : உலகின் நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை நொறுக்கிய பிரவின் ஜாதவ்

உலகின் நம்பர் 2 ரஷ்ய வீரரை 6-0 என்று வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இறங்கிய பிரவின் ஜாதவுக்கு 3வது செட் கைக்கொடுக்கவில்லை. மற்ற செட்களில் 1 புள்ளிதான் இருவருக்கும் இடைவெளி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகவே மனச்சோர்வு அடைவதற்கு ஒன்றுமில்லை. நெருக்கமாக வந்து போராடிதான் தோற்றிருக்கிறார் பிரவின் ஜாதவ்.

top videos

    ஆனாலும் உலக நம்பர் 2 ரஷ்ய வில்வித்தை வீரரை வெளியேற்றிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் பிரவின் ஜாதவ். போராடி கடைசியில் இவரும் வெளியேறி விட்டார்.

    First published:

    Tags: Tokyo Olympics