• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி: வெண்கலப் பதக்கம் வெல்ல வாழ்த்து கூறினார்

இந்திய ஹாக்கி அணி கேப்டனிடம் பேசிய பிரதமர் மோடி: வெண்கலப் பதக்கம் வெல்ல வாழ்த்து கூறினார்

கோப்புப் படம்.

கோப்புப் படம்.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் போராடித் தோல்வி கண்ட இந்திய அணிக்கு வெண்கலம் வெல்ல வாழ்த்து கூறினர் பிரதமர் நரேந்திர மோடி.

  • Share this:
    பெல்ஜியத்திடம் தோல்வி கண்ட பிறகு இந்திய கேப்டன் மன்பிரீத்திடம் பேசி உற்சாகமூட்டினார் பிரதமர் மோடி.

    பெல்ஜியத்துக்கு எதிரான டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்று முன்னிலைபெற்று பிறகு 2-5 என்று போராடித் தோல்வி கண்ட போட்டியை பிரதமர் மோடி முழுதும் தொலைக்காட்சியில் பார்த்தார்.

    ஆட்டம் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி தன் ட்வீட்டில், அரையிறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் இந்திய அணியின் திறமையைக் கண்டு பெருமை கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.

    Also Read: India vs Belgium:  துயரமான நாள்: கடைசி 15 நிமிடத்தில் சரிவு கண்ட இந்திய ஹாக்கி அணி- வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்பு

    இந்நிலையில் இந்திய அணி தோல்வி கண்டாலும் அடுத்ததாக வெண்கலப்பதக்க வாய்ப்பைத் தக்க வைத்ததையடுத்து இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் மோடி தொடர் முழுதும் நன்றாக ஆடியதற்காக இந்திய அணியைப் பாராட்டியதோடு அடுத்த போட்டியில் அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.

    ட்விட்டரில் மோடி கூறியிருப்பதாவது:

    வெற்றிகளும் தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம். டோக்கியோ ஒலிம்பிக்கில் நம் இந்திய ஆடவர் ஹாக்கி அணி சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். இதுதான் முக்கியமானது.

    அடுத்த போட்டிக்காகவும் எதிர்கால போட்டிகளுக்காகவும் இந்திய ஹாக்கி அணியை வாழ்த்துகிறேன். நம் வீரர்களைக் கண்டு நாடே பெருமைப் படுகிறது.

    என்று பதிவிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    போட்டியை தொடக்கத்திலிருந்து முழுதும் பார்த்தார் பிரதமர் மோடி. அப்போது செய்த ட்வீட்டில், இந்திய-பெல்ஜியம் ஹாக்கி அரையிறுதியை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: