யோகாவைத் துறந்து ஹாக்கி வெற்றியைக் கண்டு களித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்தியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையே இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் நடைபெற்ற த்ரில்லிங்கான வெண்கலப் பதக்கப் போட்டியை பிரதமர் மோடி கடைசி வரை கண்டு களித்தார்.

 • Share this:
  இந்தியா-ஜெர்மனி அணிகளுக்கு இடையே இன்று டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிவில் நடைபெற்ற த்ரில்லிங்கான வெண்கலப் பதக்கப் போட்டியை பிரதமர் மோடி கடைசி வரை கண்டு களித்தார்.

  இந்தியா ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்று வெண்கலப்பதகக்த்தை வென்றது.  இந்தப் போட்டியை ரசித்த கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களில் பிரதமர் மோடியும் ஒருவர், இவர் இதற்காக யோகா பயிற்சியையும் இன்று ஒத்தி வைத்தார். காலை 7 மணிக்கே இந்தப் போட்டி நடைபெற்றதால் பிரதமரின் யோகா நேரத்தில் இது அமைந்தது, ஆனால் யோகா பயிற்சியை துறந்து போட்டியை ரசித்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி

  Also Read: வரலாற்று வெண்கலப் பதக்கம் கொரோனா போராளிகள், முன்களப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு: இந்திய ஹாக்கி கேப்டன் அறிவிப்பு

  வெண்கலம் வென்ற பிறகு பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்றுக் கணம்! இந்த நாள் இந்தியர் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம்பெறும் நாள். இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்.

  Also Read: Hockey| India wins Bronze : அந்த 7 நிமிடங்கள்: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றுத் தருணம் மலர்ந்த கதை: அற்புதன் ஸ்ரீஜேஷின் கடைசி விநாடி சேவ்
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

   

  இந்தச் சாதனை மூலம் ஒட்டுமொத்த தேசத்தின் எண்ணங்களை தங்கள் வசமாக்கினர் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர். குறிப்பாக இளைஞர்களின் கற்பனைகளை தங்கள் வசமாக்கினர். நம் ஹாக்கி அணி மீது இந்தியா பெருமை கொள்கிறது” என்று ட்வீட் செய்தார்.
  Published by:Muthukumar
  First published: