Mirabai Chanu | மீராபாய் சானு 135 கோடி முகங்களில் பெரும் புன்னகையை வரவழைத்த வெள்ளி மங்கை : அனுராக் தாக்கூர் நெகிழ்ச்சி

வெள்ளி மங்கை மீராபாய் சானு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 49 கிலோ உடல் எடைப்பிரிவில் பளுத்தூக்குதலில் இந்தியாவின் முதல் பதக்கத்தை, வெள்ளிப்பதக்கமாக வென்ற மீராபாய் சானுவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  • Share this:
    மத்திய இளையோர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தன் வாழ்த்துச் செய்தியில், “முதலி மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய நன்றி. பிரதமர் மோடி, மற்றும் 135 கோடி இந்திய மக்கள் சார்பிலும் மிகப்பெரிய நன்றி. 135 கோடி மக்களின் முகங்களில் பெரும் புன்னகையைக் கொண்டு வந்த மீராபாய் சானுவுக்கு நன்றி.

    முதல் நாள், முதல் பதக்கம். வெள்ளிப்பதக்கம். நாட்டையே பெருமைப் படச் செய்து விட்டீர்கள்” என்றார் அனுராக் தாக்கூர்.

    மேலும், “நாங்கள் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். இந்தியா முழுதுக்குமே கிரியா ஊக்கியாக இருக்கிறீர்கள். முதல் நாளில் நீங்கள் தொடங்கும்போதே நினைத்தேன், மற்ற வீரர்களும் இவரை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சாதித்து இந்தியாவை பெருமையடையச் செய்ய வேண்டும்” என்றார் அனுராக் தாக்கூர்.

    இதையும் படிங்க: Tokyo Olympics Mirabai Chanu| மீராபாய் சானு: வறுமையை வென்றார், ஒலிம்பிக்கையும் வென்றார், இதயங்களையும் வென்றார்!
     மீராபாய் சானு மொத்தமாக 202 கிலோ எடைத்தூக்கினார். ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, 115 கிலோவை கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் தூக்கினார் மீராபாய் சானு.



    சீனாவின் ஹூ ஷிஹுய் தங்கப்பதக்கமும் இந்தோனேசியாவின் விண்டி சந்திகா ஆய்சா வெண்கலமும் வென்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கு முன்னர் கர்னம் மல்லேஸ்வரி 69 கிலோ உடல் எடைப்பிரிவில் 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்ப்பிக்கில் வெண்கலம் வென்றார்.
    Published by:Muthukumar
    First published: