ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: எந்த நாடு எத்தனையாவது இடம்- இந்தியாவின் இடம் என்ன?

பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் முழு விவரம் இதோ: சீனா 32 தங்கப் பதக்கம், 21 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 69 பதக்கங்களை இதுவரை பெற்று முதலிடத்தில் உள்ளது.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் முழு விவரம் இதோ: சீனா 32 தங்கப் பதக்கம், 21 வெள்ளி, 16 வெண்கலத்துடன் 69 பதக்கங்களை இதுவரை பெற்று முதலிடத்தில் உள்ளது.

  இரண்டாவது இடத்தில் அமெரிக்கா 24 தங்கம், 28 வெள்ளி, 21வெண்கலம் மொத்தமாக 73 பதக்கங்களை இதுவரை பெற்றுள்ளது.

  ஜப்பான் 19 தங்கம் 6 வெள்ளி, 11 வெண்கலம் ஆகியவற்றுடன் 36 பதக்கங்களுடன் 3ம் இடம் வகிக்கிறது.

  14 தங்கம், 4 வெள்ளி, 16 வெண்கலம் ஆகியவற்றுடன் மொத்தம் 34 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4வது இடம் வகிக்கிறது.

  ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 5ம் இடத்தில் மொத்தம் 52 பதக்கங்களுடன் உள்ளது, இது 13 தங்கம், 21 வெள்ளி, 18 வெண்கலத்துடன் உள்ளது.

  6வது இடத்தில் கிரேட் பிரிட்டன் 13 தங்கம், 17வெள்ளி, 13 வெண்கலம் 43 பதக்கங்களுடன் உள்ளது.

  ஜெர்மனி மொத்தமாக 30 பதக்கம் பெற்றுள்ளது இதில் 8 தங்கம், 8 வெள்ளி, 14 வெண்கலம் என்று 7ம் இடத்தில் உள்ளது.

  8வது இடத்தில் பிரான்ஸ் 6 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 24 பதக்கம் பெற்றுள்ளது.

  9வது இடத்தில் நெதர்லாந்து 6-8-7 என்று 21 பதக்கங்களுடன் உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  10வது இடத்தில் கொரியா 6-4-9என்று 19 பதக்கங்களுடன் உள்ளது.

  இந்தியா 1 வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2 பதக்கங்களுடன் 64-ம் இடத்தில் உள்ளது.
  Published by:Muthukumar
  First published: