டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே அவர் தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை ஏலம் விட்டு இருக்கிறார்.
போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி பேஸ்புக் மூலம் விடுத்து இருந்த வேண்டுகோளை பார்த்த அவர் ஆன்-லைன் மூலம் தனது வெள்ளிப்பதக்கத்தை ஏலத்தில் விட்டார்.
அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது. அந்த பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து வியக்க வைத்துள்ளார். அதேநேரத்தில் பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் பரந்த மனதை பாராட்டி இருப்பதுடன் அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த ஈட்டி எறிதல் வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் 2 செமீ தூரத்தில் பதக்கத்தை நழுவ விட்டார். இவருக்கு 2018-ல் எலும்புப் புற்று நோய் ஏற்பட்டது. இந்தப் போராட்டத்திலிருந்து மீண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் 64.61 மீ தூரம் எறிந்து வெள்ளி வென்றார்.
தாயகம் திரும்பிய இவர் பேஸ்புக் மூலம் 8 மாத குழந்தையின் உடல் பிரச்னைகளை அறிந்தார். அந்த குழந்தையின் பெயர் மலிசா. ஐரோப்பிய நாடுகளில் சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனையடுத்து அமெரிக்காவின் ஸ்டான்போர்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரைக் காப்பாற்ற 3 கோடி செலவாகும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தப் பணத்துக்கு பெற்றோர் எங்கு செல்வார்கள். நிதியுதவி கேட்டனர்.
இது தெரியவர தன் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கததை ஏலம் விட்டு நிதி திரட்டிக் கொடுத்தார் மரியா ஆந்த்ரேஜிக்.
ஆனால் மரியாவின் வெள்ளிப் பதக்கத்தை ஒரு கோடிக்கு எடுத்த நிறுவனம் குழந்தையின் பெற்றோரிடம் நிதியை ஒப்படைத்ததோடு மரியாவிடம் வெள்ளிப்பதக்கததையும் திருப்பி கொடுத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மரியாவுடன் சேர்ந்து தாங்களுமே உதவ முடிந்ததை எண்ணி ஏலம் எடுத்த நிறுவனம் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, Tokyo Olympics