Tokyo Olympics| டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தோல்வி

ஷரத் கமல்-மனிகா பாத்ரா தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிகா பாத்ரா-ஷரத் கமல் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியான மனிகா பாத்ரா-ஷரத் கமல் ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    சைனீஸ் தைபே கலப்பு இரட்டையர் ஜோடி லின் யுன் ஜு -செங் சிங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது மனிகா பாத்ரா-ஷரஹ் கமல் ஜோடி. இந்த சீன தைபே ஜோடி உலகின் நம்பர் 1 ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய ஜோடி 8-11, 6-11, 5-11, 4-11 என்ற செட்களில் 27 நிமிடங்களில் தோல்வி கண்டது. அதாவது 4 செட்களில் ஒரு செட்டில் கூட வெல்லவில்லை.

    19வயது லின் யுன் ஜூ தன் இஷ்டத்துக்கு வின்னர்களை அடித்துக் கொண்டிருந்தார். அவர்களது வேகத்தின் முன்னால் இந்திய வீரர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் தன் சர்விலேயே 27 புள்ளிகளை இந்திய ஜோடி இழந்தது. முதல் ஆட்டத்தில் பாத்ரா-ஷரத் கமல் ஜோடி 5-2 என்ற புள்ளிகளில் தொடங்கியது. இந்திய ஜோடியின் கை ஓங்கியது இந்த ஒரே தருணத்தில்தான். கடைசியிலெல்லாம் வெறும் சம்பிரதாயம்தான்.

    இன்று டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் மனிகா பாத்ராவும் சுதிர்தா முகர்ஜியும் பங்கேற்கின்றனர்.மனிகா பாத்ரா பிரிட்டனின் ஹோ டின் டின் என்பவரைச் சந்திக்கிறார். சுதிர்தா முகர்ஜி ஸ்வீடனின் லிண்டா பெர்க்ஸ்ட்ரோயெம் என்பவரைச் சந்திக்கிறார். சரத் கமல் மற்றும் ஜி.சத்தியன் ஆகியோரும் சிங்கிள்சில் கலந்து கொள்கின்றனர்.
    Published by:Muthukumar
    First published: