• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics | இந்தியாவுக்கு இன்னொரு பதக்க வாய்ப்பு: காலிறுதியில் பாக்சிங் வீராங்கனை லவ்லினா

Tokyo Olympics | இந்தியாவுக்கு இன்னொரு பதக்க வாய்ப்பு: காலிறுதியில் பாக்சிங் வீராங்கனை லவ்லினா

பதக்கத்துக்கு அருகில் இருக்கும் இந்திய வீராங்கனை லவ்லினா.

பதக்கத்துக்கு அருகில் இருக்கும் இந்திய வீராங்கனை லவ்லினா.

பளுத் தூக்குதலில் இந்தியாவின் மணிப்பூர் மாநில வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் மற்றொரு இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வதற்கு மிக அருகில் உள்ளார்.

  • Share this:
    பளுத் தூக்குதலில் இந்தியாவின் மணிப்பூர் மாநில வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் மற்றொரு இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வதற்கு மிக அருகில் உள்ளார்.

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியக் குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் அனுபவசாலியான ஜெர்மன் வீராங்கனை நாடின் ஆபெட்ஸ் என்பவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

    வெல்டர்வெய்ட் பிரிவான 64கிலோ-69 கிலோ உடல் எடைப்பிரிவில் லவ்லினா காலிறுதிக்குத் தகுதி பெற்றார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் செல்வார், இந்த பாக்சிங் பிரிவில் அரையிறுதியில் நுழைபவர்களுக்கு குறைந்தது வெண்கலம் உண்டு.

    இதையும் படிங்க: Tokyo Olympics| இந்திய பேட்மிண்டன் அணியின் சோகம்: வென்றும் காலிறுதிக்கு தகுதி இல்லை- ஏன் தெரியுமா?

    ஜூலை 30ம் தேதி முன்னாள் உலக சாம்பியன் சென் நியன் சின் என்ற வீராங்கனையை லவ்லினா சந்திக்கிறார். இதில் வென்று விட்டால் அரையிறுதியில் தோற்றாலும் கவலையில்லை வெண்கலம் வெல்வார் லவ்லினா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய போட்டியில் அனுபவ ஜெர்மன் குத்துச் சண்டை வீராங்கனை ஆபெட்ஸுக்கு எதிராக லவ்லினா கவுண்ட்டர்-பஞ்ச்சில் சிறந்து விளங்கினார். மெதுவாகவே தொடங்கினார், ஆனால் பிறகு சவால் முற்றியது. சிலபல அபார பஞ்ச்களை கொடுத்தார்.

    முதல் சுற்றில் 3 நடுவர்கள் ஆபெட்ஸை லவ்லினா வீழ்த்தியதாகவே கருதினர். 2வது சுற்றில் லவ்லினாவின் ஆதிக்கம் கூடியது. மேலதிக ஆக்ரோஷம் காட்டாவிட்டாலும் எதிர்த்தாக்குதலில் துல்லியமாகச் செயல்பட்டு எதிராளியின் பஞ்ச்களை வாங்காமல் தவிர்த்தார். 3வது சுற்றில் ஜெர்மன் வீராங்கனை ஆபெட்ஸ் கடும் அழுத்தத்தில் இருந்தார், ஆனால் பார்மில் இருந்த லவ்லினா காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் வென்றால் பதக்கம். குறைந்தது வெண்கலம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: