Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்: ஜூடோவில் தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனை சுஷீலா தேவி - சாதனைகள் ஒரு பார்வை

சுஷீலா தேவி. | ட்விட்டர்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனை சுஷீலா தேவி லிக்மபாம் ஆவார்.

  • Share this:
    கிளாஸ்கோவில் 2014ல் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றவுடன் இவரது பெயர் ஜூடோ உலகில் பிரபலமடைந்தது. ஜூலை 5ம் தேதி டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முதல் முறையாக ஜூடோவில் தகுதி பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார்.

    மணிப்பூர் மாநிலம் இம்பால், கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷீலா தேவி. இவர் 1995ம் ஆண்டு பிறந்தார். இவரது மாமா லிக்மபாம் தினித் சர்வதேச ஜூடோ வீரர், இவர்தான் சுஷீலா தேவிக்கு வழிகாட்டி, ஆசான் எல்லாம். இந்திய விளையாட்டுத்துறை ஆணையத்தின் சாவித்ரி சானுவிடம் இவர் பயின்றார். 2017-ல் சுஷீலா மணிப்பூர் போலீஸில் சேர்ந்தார்.

    இதையும் படிங்க: Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதலில் பதக்கம் வெல்வாரா கமல்பிரீத் கவுர்? சாதனைகள்- ஒரு பார்வை
     சாதனைகள்:

    வெள்ளிப்பதக்கம்: காமன்வெல்த் கேம்ஸ் 2014
    தங்கப்பதக்கம்: காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் 2019

    ஆசிய ஓபன் சாம்பியன்ஷிப்: ஹாங்காங் 2018- வெள்ளி, ஹாங்காங் 2019- வெள்ளி.

    இதையும் படிங்க: Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தைப் போட்டிகளின் இந்திய ஒளிபரப்பு நேரம்  

    ஒலிம்பிக் தகுதி பெற்றது எப்படி?

    ஆசிய வீராங்கனைகளில் ஜூடோவில் தர நிலையில் சற்றே உயர்ந்த நிலையில் இருக்கும் 2 ஆசிய வீரர்களில் சுஷீலாவும் ஒருவர். துணைக்கண்ட கோட்டாவில் இவர் 46வது தரவரிசையில் இருந்தார். 989 புள்ளிகளையும் பெற்றிருந்தார். இவர் மகளிர் ஜூடோ எக்ஸ்ட்ரா லைட் வெய்ட் பிரிவு (48கிலோ) போட்டியில் பங்கேற்பார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தனது 5-6 வயதில் ஜூடோ கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் கொண்டு வருவாரா என்பதை ஆவலுடன் இந்திய ஒலிம்பிக் கமிட்டி எதிர்பார்க்கிறது, ரசிகர்களும்தான். பதக்கம் வெல்ல இவரையும் வாழ்த்துவோம்.
    Published by:Muthukumar
    First published: