Tokyo Olympics: டோக்கியோ ஒலிம்பிக்: வட்டு எறிதலில் பதக்கம் வெல்வாரா கமல்பிரீத் கவுர்? சாதனைகள்- ஒரு பார்வை

கமல்பிரீத் கவுர். வட்டு எறிதல். டோக்கியோ ஒலிம்பிக்

முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியை சந்திக்கும் 25 வயது வட்டு எறிதல் (Discus Throw)வீராங்கனை கமல்பிரீத் கவுர் பற்றி தெரிந்து கொள்வோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதி தொடங்குகிறது, இதில் கலந்து கொள்ளும் வீரர்களை பிரதமர் மோடி மெய்நிகர் சந்திப்பில் ஊக்குவித்தார்.

    முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியை சந்திக்கும் 25 வயது வட்டு எறிதல் (Discus Throw)வீராங்கனை கமல்பிரீத் கவுர் பற்றி தெரிந்து கொள்வோம்.

    பஞ்சாப் மாநிலத்தின் ஸ்ரீமுக்சர் சாகிப் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் கமல்பிரீத் கவுர். வட்டு எறிதல் விளையாட்டை இவர் முதன் முதலில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில் ஆடினார். 2014ம் ஆண்டு இதுதான் தன் கரியர் என்று வட்டு எறிதல் விளையாட்டைத் தேர்வு செய்தார்.

    பயிற்சி, கடின உழைப்பின் மூலம் இந்தப் பிரிவில் முன்னேறி 2016-ல் யு-18, மற்றும் யு-20 தேசிய சாம்பியன் பட்டம் வென்றார். 2017-ல் உலக பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் 6ம் இடம் பெற்றார். 2019-ல் ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு 5ம் இடம் பிடித்தார்.

    Also Read: வெற்றிக்கு பின் உங்களுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்: பி.வி. சிந்துவுக்கு ஊக்கம் அளித்த பிரதமர் மோடி!


     இப்படியாக தொடர்ந்து முன்னேற்றம் காட்டி வந்த கமல்பிரீத் கவுர் 24வது பெடரேஷன் கோப்பை மூத்த வீரர்கள் தடகள போட்டித் தொடரில் 65 மீ தூரம் என்ற மைல்கல்லை கடந்த முதல் இந்திய வீராங்கனையானார். இதன் மூலம்தான் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றாக் கமல்பிரீத் கவுர்.

    24ம் சீனியர் பெடரேஷன் கோப்பையில் இவர் தங்கம் வென்றது தொடர்ச்சியாக இரண்டாம் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ல் இதே பெடரேஷன் கோப்பையில் வட்டு எறிதலில் 60.25 மீ விட்டெறிந்து தங்கம் வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


     இந்திய ரயில்வே ஊழியரான இவர் ரயில்வே அணியை பிரதிநிதித்துவம் செய்கிறார். கிருஷ்ணா பூனியாவின் 64.76 மீ தூரம் வட்டு எறிதல் சாதனையை முறியடித்துத்தான் அவர் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.  அதாவது ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற 63.5 மீ எறிந்தால் போதும், ஆனால் கமல்பீரித் கவுர் 65.06 மீ விட்டெறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார்.



    சமீபத்தில் இந்தியன் கிராண்ட் ப்ரீயில் 66.59 மீ தூரம் எறிந்து புதிய சாதனை படைத்தார்.

    இவர் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்தியாவுக்காக பதக்கம் வென்று தர அவரை வாழ்த்துவோம்.

    Published by:Muthukumar
    First published: