Tokyo Olympics | ஒலிம்பிக்கை நடத்துமாறு நெருக்கடியா?- என்னிடம் நடக்காது- மறுக்கும் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் சூகா.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கொடுத்த நெருக்கடியினால்தான் கொரோனா அச்சுறுத்தலைப் புறக்கணித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது ஜப்பான் என்ற செய்திகளை ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

  • Share this:
    “நாங்கள்தான் நடத்துகிறோம் என்று கையை உயர்த்தினோம், ஏனெனில் நாங்கள் நடத்த விரும்பினோம், யாரும் என் மீது எதையும் வலியத் திணிக்க முடியாது அப்படி அவர்கள் திணித்தால் நான் திருப்பி அடிக்கக் கூடிய நபர் என்பது அனைவருக்கும் தெரியும்.” என்றார் பிரதமர் சூகா.

    கொரோனா காலத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்று ஜப்பான் அரசியல் வட்டாரங்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு நிலவியது. கருத்துக் கணிப்புகளும் கூட ஒலிம்பிக் போட்டிகளை நடத்தக் கூடாது என்பதாகவே மக்கள் கருத்து உள்ளது.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தினசரி 1,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒலிம்பிக் கிராமத்திலேயே 70 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனாவைப் பரப்பும் இடமாக மாறிவிடுமோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

    Also Read: Rahul Dravid |நாம் சாம்பியன்கள் போல் ஆடினோம்: ராகுல் திராவிடின் உற்சாகப் பேச்சு

    கொரோனா நிலவரங்களைக் கருத்தில் கொண்ட டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தொஷிரோ மியூட்டோ “கொரோனா எண்ணிக்கை குறித்து நம்மால் எதையும் கணிக்க முடியவில்லை” என்றார்.

    ஆனால் ஐஓசி தலைவர் தாமஸ் பாக் கொரோனா மறுப்புவாதியாக இருந்து வருகிறார்,தொடர்ந்து மிகவும் பாதுகாப்பாக நடக்கும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ஜப்பான் பிரதமர் சூகா போட்டிகளை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. என்கிறார், மேலும், ‘விலகுவது எளிது, நடத்துவதுதான் சவால்’ என்கிறார்.

    இந்நிலையில் மேலும் சில தடகள வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பான்சர்களே டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளனர். அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவர மாற்று வீராங்கனை அறிவிக்கப்பட்டார் ஆனால் அவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

    மேலும் மெக்சிகோ பேஸ்பால் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    Published by:Muthukumar
    First published: