Tokyo Olympics 2020| ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

இந்திய வில்வித்தை அணி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை அணிதரப்பு போட்டியில் இந்தியாவின் பிரவின் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் கொண்ட அணி கஜகஸ்தான் அணியை 6-2 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தை அணிதரப்பு போட்டியில் இந்தியாவின் பிரவின் ஜாதவ், அதானு தாஸ், தருண் தீப் ராய் ஆகியோர் கொண்ட அணி கஜகஸ்தான் அணியை 6-2 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    காலிறுதியில் வலுவான தென் கொரியாவை சந்திக்கிறது இந்திய அணி.

    கஜகஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் அபாரமாக ரிலீஸ் செய்தனர், குறிப்பாக அதானு தாஸ் 10 புள்ளிகள் இலக்கை 5 முறை குறிவைத்துத் தாக்கினார்.

    Also Read: Tokyo Olympics| ஒலிம்பிக்கில் வெற்றியுடன் தடம்பதித்த பவானி தேவி உலக நம்பர் 3 வீராங்கனையிடம் தோல்வி
     கஜகஸ்தானின் டெனிஸ் கான்கின், அப்துலின், சன்சர் முசாயேவ் சிலபல அபார ரீலீஸ்களின் கீற்றுகளை வெளிப்படுத்தினர். 3வது செட்டை 1 புள்ளி இடைவெளியில் கைப்பற்றினர்.



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் இந்திய அணி 6-2 என்று கஜகஸ்தானை வெளியேற்றியது, காலிறுதியில் வலுவான தென் கொரியா அணியை சந்திக்கின்றது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் சனிக்கிழமையன்று இந்திய வில்வித்தை ஜோடி தென்கொரியாவிடம் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: