Tokyo Olympics: இந்திய வில்வித்தை ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி; தென் கொரியாவிடம் வீழ்ந்தது

இந்திய வில்வித்தை அணி தோல்வி.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் வில்வித்தை அணிகள் பிரிவில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆடவர் வில்வித்தை அணிகள் பிரிவில் இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி கண்டு வெளியேறியது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தானை அற்புதமாக வீழ்த்திய இந்திய அணி வலுவான தென்கொரியா அணியிடம் காலிறுதியில் 6-0 என்று வீழ்ச்சி கண்டது.

    இந்திய அணி வீரர்கள் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தருண் தீப் ராய் ஆகியோர் கடினமான போட்டியில் ஸ்கோர் செய்யத் தவறினர். தென் கொரியா அணி வீரர்கள் கிம் ஜே டியோக், கிம் வூஜின், மற்றும் ஓ ஜினியேக் ஆகியோர் இந்திய அணியை வெளியேற்றினர்.

    இதன் மூலம் அரையிறுதிச் சுற்றுக்கு தென் கொரியா ஆடவர் வில்வித்தை அணி தகுதி பெற்றது.

    Also Read: Tokyo Olympics 2020| ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

    முதலில் கொரியா அணி 10-10-9 என்று புள்ளிகளை அள்ள இந்திய அணி 8-10-10 என்று புள்ளிகள் எடுத்தது. ஆனால் அதன் பிறகு கொரியா 10-10-10 என்று அள்ளி 2 புள்ளிகளைப் பெற்றது.

    Also Read: Tokyo Olympics | தங்கம் வென்று கெத்து காட்டிய தீஸ்திரியா க்ராஸ்னிக்.. கொண்டாட்டத்தில் கொசவோ

    2வது செட்டில் இந்தியா நன்றாகத் தொடங்கியது 9-10-10 என்று அள்ளியது. மேலும் 10-10 என்று சவால் காட்டியது, ஆனால் கடைசி அம்பில் அதானு தாஸ் 8 புள்ளிகளையே பெற கொரியாவுக்கு மீண்டும் 2 புள்ளிகள் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தென் கொரிய அணி 2 செட்களில் 59 ஸ்கோர் செய்தது. 3வது செட்டிலும் கொரிய அணி அனாயசமாக ஆடி 56 ஸ்கோர் செய்தது, முதல் முறையாக 8 என்ற புள்ளியை எடுத்தனர். இந்திய அணியினர் 8 மற்றும் 9 ஸ்கோர் இலக்கை தாக்கினார்களே தவிர 10 புள்ளிகள் இலக்கை தவற விட்டனர். இதையடுத்து 0-6 என்று தோற்றது.

    காலிறுதியில் ஏமாற்றமளித்த இந்திய அணியின் பதக்க வாய்ப்பு இந்தப் பிரிவில் தகர்ந்தது.
    Published by:Muthukumar
    First published: