Tokyo Olympics| இந்தியா அபார வெற்றி: ஹாக்கியில் நியூசிலாந்தை 3-2 என்று வீழ்த்தியது

2 கோல்களை அடித்த ஹர்மன்பிரீத் சிங். | கோப்புப் படம்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் ஆடவர் ஹாக்கியில் இன்று இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிவு-ஏ-யில் வெற்றியுடன் ஆரோக்கியமாகத் தொடங்கியுள்ளது.

  • Share this:
ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களை அடிக்க, முடிவில் நியூசிலாந்து கடும் நெருக்கடி கொடுத்த போதும் அபாரமாக தடுத்தார் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ். ரூபிந்தர் பால் சிங் பெனால்டியில் ஒரு கோலை அடித்தார்.

ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 3-3 என்று ட்ரா செய்திருக்கும். அந்த அணியின் கேன் ரசல் கோலின் டாப் இடது மூலைக்கு அடித்தார். ஆனால் அங்குதான் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் எழுச்சி பெற்றார், ஒரே டைவ், வலது புறம் பாந்து கோலைத் தடுத்தார், உண்மையில் நெருக்கடி தருணத்தில் அருமையான சேவ் அது. இதற்கு சில கணங்களில் இன்னொரு கோல் வாய்ப்பையும் ஸ்ரீஜேஷ் அற்புதமாகத் தடுத்தார்.

அபார தடுப்புகளை நிக்ழ்த்திய இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்.


இடைவேளையின் போது ஹர்மன்பிரீத் அடித்த அடுத்தடுத்த பெனால்டி கார்னர் கோல்களினால் இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: Tokyo Olympics| முதல் தங்கம் வென்றது சீனா: துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை சாதனை

ஆனால் ஆட்டம் தொடங்கி 6வது நிமிடத்தில் நியூசிலாந்து முதல் கோலை அடித்து 1-0 என்று முன்னிலைப் பெற்றது. கேன் ரசல் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். அதன் பிறகு இந்திய அணி எழுச்சி கண்டது. 4 நிமிடங்கள் கழித்து இந்தியாவின் ருபீந்தர் பால் சிங் ஒரு கோலை பெனால்டி கார்னர் வாய்ப்பில் அடித்து சமன் செய்தார்.

முதல் பாதியில் நியூஸிலாந்துக்கு அடுத்தடுத்து 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன, இந்தியா அதனை சிறப்பாகத் தடுத்தாட்கொண்டது. இதில் கடைசி பெனால்டி கார்னர் வாய்ப்புதான் இந்தியாவுக்கு எதிர்த்தாக்குதல் வாய்ப்பை கிடைத்தது. ஆனால் குர்ஜந்த் சிங் ஷாட்டை நியூசிலாந்து கோல் கீப்பர் தடுத்தார்.

இரண்டாவது கால் மணி நேர ஆட்டத்தில் இந்தியா பந்தின் மீது முழுக் கட்டுப்பாட்டை கொண்டிருந்தது 26வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற 2வது கோல் அடித்தது இந்தியா. 3வது குவார்ட்டர் தொடங்கியவுடனேயே ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோலை அடிக்க இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நியூசிலாந்து வீரர் நிக் வில்சன் வலது விங்கிலிருந்து பாஸ் செய்த பந்து கோல் ஆனது, ஸ்டீபன் ஜென்ஸ் குச்சியில் பட்டு கோல் ஆனதாகத் தெரிந்தது. ஆனால் யார் குச்சியில் பட்டுச் சென்றது என்பது தெளிவாக இல்லை. 43வது நிமிடத்தில் இந்த கோல் விழ 3-2 என்று ஆக ஆட்டம் விறுவிறுப்பானது.

4வது குவார்ட்டர் பதற்றமாக நடந்தது, இந்திய வீரர் லலித் உபாத்யாய் அருமையான ஸ்டிக் வொர்க் ட்ரிப்ளிங்கில் நியூசிலாந்து வீரர்களை கடைந்து இலக்கு நோக்கி அடித்த ஷாட்டை நியூசிலாந்து கோல் கீப்பர் தடுத்தார். இதன் பிறகு நியூசிலாந்துக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது அதை மன்பிரீத் சிங் தடுத்தார். இன்னொரு கார்னர் கொடுத்தார் நடுவர், ஆனால் இந்திய கேப்டன் அதனை மேல்முறையீடு செய்தார். பந்து மன்பிரீத் ஸ்டிக்கில்பட்டது தெரிந்தது. ஆனால் அது அபாயகர ஆட்டமா என்று சொல்ல முடியாது, இருப்பினும் நியூசிலாந்துக்கு கார்னர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகுதான் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷின் அட்டகாசமான தடுப்புகளினால் இந்தியா வென்றது.
Published by:Muthukumar
First published: