பிரிட்டனிடம் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி: காலிறுதி வாய்ப்பு கடினம்

இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வாய்ப்பு கடினம்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி பிரிட்டன் அபார வெற்றிபெற்றது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இன்று நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் மகளிர் ஆக்கி அணியை எதிர்கொண்டது. ஆனால் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோற்றது.

    இந்திய மகளிர் ஹாக்கி அணி இதன் மூலம் இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டது. கோல் வித்தியாசமும் அதிகமிருக்க, இனி வரும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் காலிறுதி வாய்ப்பு மங்கலாகவே இருக்கிறது.

    ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே பிரிட்டன் வீராங்கனை ஹனா மார்ட்டின் முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் ஹனா இரண்டாவது கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை ஷர்மிளா தேவி கோல் அடித்து இந்திய அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இதனால், ஆட்டம் சூடுபிடித்தது.

    Also Read: Tokyo Olympics: பதக்கப் பட்டியலில் அமெரிக்காவை முந்திய ஜப்பான்

    ஆனால், போட்டியின் 3-வது கால்பாகத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய பிரிட்டன் வீராங்கனைகள் கோல் அடித்தனர். இதனால், பிரிட்டன் அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    Also Read: பி.வி.சிந்து அபாரம்... ஒலிம்பிக் பேட்மிண்டன் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி
     அதன்பின்னர், போட்டியின் 57-வது நிமிடத்தில் பிரிட்டன் வீராங்கனை கிரேஸ் கோல் அடித்ததால் அந்த அணியின் கோல் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆனால், இறுதிவரை போராடிய இந்திய அணியால் 1 கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால், இந்தியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிட்டன் அணி அபார வெற்றிபெற்றது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்திய அணிக்கு மொத்தம் 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் இதில் ஒன்றை மட்டுமே கோலாக்க முடிந்தது.

    லீக் சுற்றின் அடுத்த போட்டில் இந்திய பெண்கள் ஆக்கி அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் போட்டி நாளைமறுநாள் நடைபெற உள்ளது.
    Published by:Muthukumar
    First published: