டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியா இன்று 3 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு

நீரஜ் சோப்ரா

இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மல்யுத்தம், கோல்ப், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன.

  இந்தியா இதுவரை 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது. மேலும் இன்றுடன் இந்தியாவிற்கான போட்டிகள் நிறைவடைய உள்ளது. இன்றைய நாளில் 3 பதக்கங்களை வெல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளது.

  மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா களம் இறங்குகிறார். கோல்ப் பெண்கள் பிரிவில் 2-வது இடத்தில் நீடிக்கும் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் கடைசி ரவுண்டில் விளையாட உள்ளார்.

  ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார். தகுதி சுற்றில் திறமையாக விளையாடி அனைவரும் கவனத்தையும் ஈர்த்த நீரஜ் இறுதிப்போட்டியில் பதக்கம் வெல்வார் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்திய நேரப்படி மாலை 4.30 இந்த போட்டி நடைபெற உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: