• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Hockey| India wins Bronze : அந்த 7 நிமிடங்கள்: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றுத் தருணம் மலர்ந்த கதை: அற்புதன் ஸ்ரீஜேஷின் கடைசி விநாடி சேவ்

Hockey| India wins Bronze : அந்த 7 நிமிடங்கள்: ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றுத் தருணம் மலர்ந்த கதை: அற்புதன் ஸ்ரீஜேஷின் கடைசி விநாடி சேவ்

வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணி.

வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணி.

இன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டி படு விறுவிறுப்பாக அமைந்தது, ஹர்மன்பிரீத் தலைமை இந்திய அணி 1-3 என்று பின்னடைவு கண்டு அபார எழுச்சி பெற்று 5-4 என்று வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

  • Share this:
இன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி வெண்கலப் பதக்கப் போட்டி படு விறுவிறுப்பாக அமைந்தது, ஹர்மன்பிரீத் தலைமை இந்திய அணி 1-3 என்று பின்னடைவு கண்டு அபார எழுச்சி பெற்று 5-4 என்று வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்று வரலாறு படைத்தது.

ஸ்ரீஜேஷ் எனும் அற்புதன் கடைசி ஜெர்மனியின் கடைசி பெனால்டி கார்னர் ஷாட்டை தடுத்த போது வரலாற்றுக் கணம் மலர்ந்தது.

ஸ்ரீஜேஷ் எனும் கோல்கீப்பிங் அற்புதன்.


உண்மையில் ஒரு காலத்தில் இந்திய ஹாக்கி அணி கால்பந்தில் பிரேசில் போல்தான். அப்படி இருந்த இந்திய ஹாக்கி அணி இன்று ஒரு வெண்கலம் வெல்ல அற்புதமாகப் போராடி சாதித்தது.  காரணம் புல்தரை ஆடுகளத்திலிருந்து சிந்தடிக் ஆடுகளமாக மாற்றப்பட ஐரோப்பிய, ஆஸ்திரேலிய அணிகள் அதுவரை கட்டின பசுவாக இருந்த ஹாக்கியில் எழுச்சி பெற இந்தியாவும் பாகிஸ்தானும் பின்னடைவு கண்டன, இன்று ஹாக்கி ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் தகுதி பெறாமல் போய் விட்டது.

இதையும் படிங்க: வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்று சாதனை

சிந்தடிக் ஆடுகளத்தில் பந்துகள் வேகமாக வரும், உருண்டு கொண்டே இருக்கும் என்பதால் கடும் பயிற்சி தேவைப்பட்டது, அதில் இந்தியா சோடை போய் மீண்டும் எழுச்சி பெற்றது. ஒரு காலத்தில் டாப் ஆக இருந்த இந்திய ஹாக்கி அணி அதன் பிறகு ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பயிற்சியாளர்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹாக்கி விதிமுறைகளும் மரபான இந்திய ஹாக்கிக்கு எதிராகச் சென்றன.

இந்நிலையில் இன்று பதக்கம் வெல்லுமா என்று கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவு மற்றும் படபடப்புடன் தொடங்கியது ஜெர்மனியுடனான ஆட்டம். ஜெர்மனி அணி ஆஸ்திரேலியாவிடம் உதை வாங்கி வென்றால்தான் ஆச்சு என்ற மன நிலையில் களமிறங்கியது.

ஆட்டம் தொடங்கி 2வது நிமிடத்திலேயே ஜெர்மனி அருமையான ஒரு பாஸை மேற்கொண்டு இந்திய சர்க்கிளுக்குள் பந்தை கொண்டு சென்றது. டிம் ஹெர்ஸ்புரூச் பந்தை புளோரியன் ஃபுக்ஸுக்கு அனுப்ப அவர் தைமூர் ஓருஸுக்கு அனுப்பினார், அங்கு தடுப்பு வளையத்தை மீறி ஜெர்மனி கோலாக மாற்ற 1-0 என்று ஜெர்மனி முன்னிலை பெற்றது.



4ம் நிமிடத்திலேயே ஜெர்மனிக்கு அதிர்ச்சி காத்திருந்தது அதன் வீரர் கான்ஸ்டாண்டின் ஸ்டைப் ஃபவுல் செய்ததால் பச்சை அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட 10 வீரர்களாக ஜெர்மனி குறுகியது. 15வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு தொடர்ச்சியாக 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்திய தடுப்பு ஆட்டம் பிரமாதம், கோல் விழவில்லை.

2வது கால்மணி நேரத்தில் ஆக்ரோஷம் கூட்டிய இந்திய அணி அந்த 7 நிமிடங்கள்:

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்திய அணி எதிர்த்தாக்குதல் நடத்தியது நீலகண்ட ஷர்மா பந்தைப் பெற்று மிக அருமையாக 2 ஜெர்மனி வீரர்களுக்குப் போக்குக் காட்டி மிக அருமையாக சிம்ரன் ஜித் சிங்குக்கு அனுப்ப அதை அவர் மிக அருமையாக ரிவர்ஸ் ஷாட்டில் கோலாக மாற்ற இந்தியா 1-1 என்று சமன் செய்தது.

24வது நிமிடத்தில் இதே நீலகண்ட ஷர்மா தன்னிடம் வந்த பந்தை சரியாக கட்டுப்படுத்தாமல் கோட்டை விட ஜெர்மனி வீரர் கிறிஸ்டபர் பந்தை எடுத்து சென்று நிகலச் வெலனுக்கு பாஸ் செய்ய ஜெர்மனி 2வது கோலை அடித்தது. 2-1 முன்னிலை.

அடுத்த 1 நிமிடத்தில் இந்திய அணி மேலும் தவறிழைத்தது சர்க்கிளுக்குள் இந்திய வீரர் சுரேந்திர குமார் பந்தை தன் கட்டுப்பாட்டிலிருந்து கோட்டை விட்டார். இதைப் பயன்படுத்தி ஜெர்மனியின் பெனடிக்ட் ஃபுர்க் 3வது கோலை அடிக்க ஜெர்மனி 3-1 என்று முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இந்திய அணி மேலெழும்புமா பதக்க கனவு கோவிந்தாவா என்று பதைபதைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த போதுதான்...

அந்த 7 நிமிடங்கள்- என்ன நடந்ததென்று தெரியாத ஜெர்மனி

27வது நிமிடத்தில் சிம்ரன் ஜித் சிங் அபாரமாக ஆட ஜெர்மனி வீரர் தவறிழைத்தார் இதனால் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ருபீந்தர் அடித்த பெனால்டி ஷாட்டை ஜெர்மன் கோல் கீப்பர் தடுக்க பட்டுத் திரும்பிய பந்தை ஹர்திக் கோலாக மாற்றினார், 3-2.



29வது நிமிடத்தில் மீண்டும் இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தில் ஜெர்மன் சர்க்கிளுக்குள் ஊடுருவ கிடைத்தது பெனால்டி கார்னர் வாய்ப்பு, இதனை கேப்டன் ஹர்மன்பிரீத் மிக அருமையான சக்திவாய்ந்த ஷாட்டில் கோலாக மாற்ற 3-3 என்று சமன்.

3வது கால்மணி நேர ஆட்டம் தொடங்கியவுடன் 31வது நிமிடத்தில் சர்க்கிளுக்குள் பந்து கொண்டு செல்லப்பட ஜெர்மனி வீரர் அதை முறையற்ற விதத்தில் தடுத்ததால் பெனால்டி ஸ்ட்ரோக் கொடுக்கப்பட்டது, ஜெர்மனி 3வது நடுவரை அணுகியது, ஆனால் பெனால்டி ஸ்ட்ரோக் நீக்கப்படவில்லை. ருபீந்தர் பால் சிங் கோலாக மாற்றி இந்தியா 4-3 என்று முன்னிலை பெற்றது.

34வது நிமிடத்தில் மீண்டும் இந்திய அணி ஆக்ரோஷம் காட்டியது. வலது புறம் இந்திய வீரர் குர்ஜந்த் சிங்கிற்கு ஒரு அருமையான பாஸ் வர அதை அவர் வேகமாக சர்க்கிளுக்குள் கொண்டு சென்றார். அங்கு சிம்ரன் ஜித் சிங் தயாராக இருந்தார், குர்ஜந்த் அடித்த ஷாட்டை சிம்ரன் ஜித் கோலாக மாற்ற இந்தியா 5-3 என்று முன்னிலை பெற்றது. ஆகவே 27வது நிமிடத்திலிருந்து 34ம் நிமிடம் வரையிலான இந்த 7 நிமிடங்கள் ஜெர்மனியின் தலைவிதியை முடித்தது.

அற்புதமாக ஆடிய சிம்ரன் ஜீத் சிங்


பிறகு 48வது நிமிடத்தில் ஜெர்மனி தன் 6வது பெனால்டி கார்னரில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் 4-5 என்று மீண்டும் பரபரப்பானது.

அதன் பிறகு ஜெர்மனி கடுமையாகப் போராடியது இந்திய தடுப்பாட்டம் அவர்களை சமன் செய்ய விடாமல் தடுத்தது, ஆனால் ஆட்டம் முடிய சில விநாடிகளே இருந்த நிலையில் ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்புக் கிடைத்தது. இது ஜெர்மனிக்குக் கிடைத்த 12வது பெனால்டி கார்னர் வாய்ப்பாகும். பெனால்டி கார்னர் ஷாட்டை ஜெர்மனி அடிக்க அற்புதன் ஸ்ரீஜேஷ் அருமையாக தடுக்க இந்தியாவின் வரலாற்றுத் தருணம் மலர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: