Tokyo Olympics Hockey |ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெற்றி! ஸ்பெயினை வீழ்த்தியது: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியின் மன பாரம் குறைந்தது

ஒலிம்பிக் ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா.

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக இந்திய அணி வீழ்த்தியது இதன் மூலம் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக இந்திய அணி வீழ்த்தியது இதன் மூலம் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 3-2 என்று வென்ற இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியிடம் 1-7 என்று படுதோல்வி கண்டது, அந்த மனபாரத்திலிருந்து மீண்டு இன்று ஸ்பெயினை 3-0 என்று வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

    இந்திய ஸ்ட்ரைக்கர் ருபீந்தர்பால் சிங் 2 கோல்களை அடிக்க துல்லிய ஹாக்கியை வெளிப்படுத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    முதல் அரைமணி நேர ஆட்டத்தில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் மற்றும் ருபீந்தர் பால் கோல்களை அடித்தனர். பிறகு 4வது கால்மணி நேர ஆட்டத்தில் பெனால்டி கார்னரை ருபிந்தர் கோலாக மாற்றினார்.

    Also Read: ஒலிம்பிக் வெள்ளி மங்கை மீராபாய் சானுவுக்கு போலீஸ் ஏ.எஸ்.பி பதவி: ரயில்வே சார்பில் ரூ.2 கோடி பரிசு

    ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் சிம்ரன்ஜீத் கோல் வாய்ப்பை தவற விட்டார். ஸ்பெயின் தாக்குதல் ஆட்டத்தில் நிறைய வாய்ப்புகளை உருவாக்கினர், இந்த தாக்குதல் ஆட்டத்தின் போது கிடைத்த எதிர்த்தாக்குதல் வாய்ப்பில்தான் சிம்ரன்ஜீத் முதல் கோலை அடித்தார், 14வது நிமிடத்தில் இந்தியா 1-0 முன்னிலை.

    பிறகு இந்திய அணிக்கு ஏகப்பட்ட பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, அதில் 4வது வாய்ப்பில் ருபீந்தர் பால் 2வது கோலை அடித்தார். பிறகு ஸ்பெயின் கடும் தாக்குதலில் இறங்கியது, ஆனால் ஸ்ரீஜேஷ் படை அருமையாக அவர்களை கோல் அடிக்க விடாமல் தடுத்தது. இதனால் ஹாஃப் டைம் போது இந்தியா 2-0 என்று முன்னிலை வகித்தது. 24வது நிமிடத்தில் ஸ்ரீஜேத் அருமையான ஒரு தடுப்பை நிகழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    3வது கால் மணி நேர ஆட்டம் இருதரப்புக்கும் சமமாக முடிந்தது, ஆனால் கோல்கள் இல்லை, பிறகு 4வது கால் மணி நேர ஆட்டத்தில் அருமையான மூவ் ஒன்றில் ருபீந்தர் பால் 3வது கோலை அடிக்க இந்தியா 3-0 என்று வெற்றி பெற்றது.

    அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-7 என்று படுதோல்வி அடைந்த பிறகே இப்படி எழுச்சிப் பெற்றது பெரிய விஷயம்தான், ஏனெனில் இந்திய அணிக்கு சர்வதேச அளவில் மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதே உண்மை.
    Published by:Muthukumar
    First published: