• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ ஓலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி: இறுதியில் பெல்ஜியம்

டோக்கியோ ஓலிம்பிக் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி: இறுதியில் பெல்ஜியம்

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்த இந்திய அணி.

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் போராடி தோல்வி அடைந்த இந்திய அணி.

டோக்கியோ ஒலிம்ப்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி போராடித் தோல்வி கண்டது. 

  • Share this:
    டோக்கியோ ஒலிம்ப்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் இந்திய அணி போராடித் தோல்வி கண்டது.

    பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணிக்கு வெண்கலப் பதக்க வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

    இந்திய அணி முதல் கால் மணி நேர ஆட்டத்தில் 2-1 என்று முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்றிக்ஸ் ஹாட்ரிக் கோல்களை அடிக்க பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    நன்றாகத் தொடங்கி போகப்போக இந்திய அணி தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டு, தடுப்பாட்டத்திலும் சோடை போனதால் கடைசியில் சரமாரியாக பெல்ஜியம் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்புகளாகக் குவிந்தது. இதில் ஒன்றை அலெக்சாண்டர் கோலாக மாற்றினார்.

    கடைசியில் பெல்ஜியம் வீரர் இந்திய கோல் அருகே அடித்த ஷாட் ஸ்ரீஜேஷுக்கு முன்னால் இருந்த இந்திய வீரரின் காலில் பட்டதால் பெனால்டி ஸ்ட்ரோக்கை நடுவர் கொடுக்க அதையும் ஹென்றிக்ஸ் கோலாக மாற்ற 4-2 என்று பெல்ஜியம் முன்னிலை பெற்றது.

    கடைசியில் கோல் கீப்பர் வேண்டாம் அதற்குப் பதில் களத்தில் இறங்கி ஆட இன்னொரு வீரரை அனுப்பியதால் கோல் போஸ்ட் காலியாக இருந்த்து அதைப் பயன்படுத்தி பெல்ஜியம் இன்னொரு கோலை அடித்தது.

    ஆட்டம் தொடங்கிய போது பெல்ஜியம் அணி 2வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பெல்ஜியம் வீரர் லாய்க் லூபர்ட் கோலாக மாற்றினார்.

    ஆனால் இந்திய அணி அந்தக் கட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை உக்கிரப்படுத்த 7வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் கிடைத்தன. இதில் ஒன்றை ஹர்மன்பிரீத் கோலாக மாற்றி சமன் செய்தார்.

    8வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் அருமையாக ஒரு பந்தை பாஸ் செய்ய அதை மந்தீப் சிங் கட்டுப்படுத்தி கோலாக மாற்ற இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது.  ஆனால் அதன் பிறகு இந்திய அணி கோட்டை விட்டது. இந்திய  கேப்டன் மன்பிரீத் சிங் பச்சை அட்டை காட்டப்பட்டு பெஞ்சுக்கு அனுப்பப்பட்டதையடுத்து இந்திய வீழ்ச்சி தொடங்கியது. இதில் பெல்ஜியம் 5-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: