• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Tokyo Olympics: ஒலிம்பிக் நடத்தினால் கொரோனாதான் தங்கம் வெல்லும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Tokyo Olympics: ஒலிம்பிக் நடத்தினால் கொரோனாதான் தங்கம் வெல்லும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 2 தடகள வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, தென் ஆப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனையடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த கவலையை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

 • Share this:
  ஒலிம்பிக் போட்டிகள் பல வீரர் வீராங்கனைகளின் கனவாக இருக்கலாம், த்ரில் வெற்றியும் ஏற்படலாம், நன்றாக ஆடி தோல்வியும் ஏற்படலாம் ஆனால் அந்த உற்சாகம், கவலைகளைத்தாண்டி தற்போதைய பெருங்கவலை கொரோனா வைரஸ் உருமாறிய வகைகளின் அச்சுறுத்தலெ என்கின்றனர்.

  ஏற்கெனவே ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறப் போகின்றன, அதே போல் பதக்கம் வெல்பவர்கள் ரசிகர்களின் ஆரவராரம் கரகோஷம் இன்றி தங்கள் பதக்கங்களை தாங்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டியதுதான், பதக்கம் அணிவிப்பு வைபவமும் இல்லை.

  இதையும் படிங்க: Health Tips | இருமல் நிற்க, பல் சொத்தையைத் தடுக்க- சிறு குறிப்புகள்

  பங்கேற்பாளர்கள் அனைவரும் முகக்கவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். தங்கம், வெள்ளி, வெண்கலம் இடையே நிறைய சமூக இடைவெளி. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பதக்கங்களை வென்ற வீரர்களே பிளேட்டிலிருந்து எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். கோல்டு மெடல் மேடையில் குரூப் போட்டோ கிடையாது.

  இத்தனை கெடுபிடிகளுடன் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஆடவர் கால்பந்து அணியில் தாபிசோ மோன்யானி, கமொஹெலோ மலாஸ்தி, வீடியோ அனலிஸ்ட் மரியோ மாஸ்தா ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Also Read: Corona Variants Explainer | டெல்டா, டெல்டா பிளஸ், எப்சிலான், லாம்ப்டா- கொரோனா உருமாறிய வைரஸ் வகைகளின் தாக்கம் என்ன?

  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடுப்பூசிக் கட்டாயம் என்று கூறவில்லை. விருப்பத்தெரிவாக விட்டு விட்டது. இது தொடர்பாக நிபுணர்கள் எச்சரித்தும் எந்த பயனும் இல்லை.

  மருத்துவக் குழுவில் உள்ள அமெரிக்க நிபுணர்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் “வெறும் பேச்சுத்தான், செயலில் ஒன்றுமில்லை” என்று சாடியுள்ளனர்.

  கலந்து கொள்ளும் வீரர்கள், வீராங்கனைகள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் என்று அனைவருக்குமான, அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்புகள் குறித்து 70 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது என்கிறது ஒலிம்பிக் கமிட்டி.

  200 நாடுகளுக்கும் மேல் 11,000 தடகள வீரர்கள் ஒரே இடத்தில் குவிகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் சில போட்டிகள் வீரர்களுக்கு இடையே உடல் ரீதியான தொடர்பு இருப்பதாகும், மல்யுத்தம், குத்துச் சண்டை போன்றவை ஹை ரிஸ்க், வெயிட் லிஃப்டிங் அவ்வளவு ரிஸ்க் இல்லாதது. பேட்மிண்டன் ரிஸ்க் இல்லாதது, மாறாக தடகளம், ரிஸ்க் நிரம்பியது. அதனால் அந்தந்த விளையாட்டுக்கேற்ப விதிமுறைகள் மாற வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

  நியூயார்க் பல்கலைக் கழகத்தின் பயோ எதிக்ஸ் பேராசிரியர் ஆர்தர் கப்லான் கூறும்போது, “உலகம் முழுவதிலிருமிருந்து வீரர்கள் வந்து ஆட வேண்டும், ஆனால் கொரோனா தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பது பைத்தியக்காரத் தனமாகும். ரிஸ்க் அதிகம் எனும்போது வாக்சின் எடுத்துக் கொள்வதை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு விட்டு விடுவது அபாயகரமானதாகும்.

  போட்டி, சவால் என்ற பெயரில் தடகள வீரர்கள் மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பது, பதக்கம் வாங்குவது அடிப்படை உரிமை கிடையாது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்கள் ஒருமாதத்துக்கு முன்னால் ஏன் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்று கேட்கிறேன்” என்கிறார். மொத்தத்தில் நிபுணர்கள் குழு ஐ.ஓ.சி. மீது கடும் விமர்சனங்களை வைத்து ஒலிம்பிக் போட்டிகளில் கோவிட் தான் தங்கம் வெல்லும் போலும் என்று எச்சரித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: