டோக்கியோ ஒலிம்பிக் : இந்தியாவின் இன்றைய போட்டிகள்

டோக்கியோ ஒலிம்பிக்

வட்டு எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்னை கமல்பிரீத் கவுர் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

  டோக்கியோ ஒலிம்பிக்கின் 9-வது நாளான இன்று இந்தியாவிற்கு நல்ல நாளாகவே அமைந்துள்ளது. தடகள போட்டியில் 200 மீட்டர் பெண்கள் ஓட்டபந்தயத்தில் டியூட்டி சந்த் ஏமாற்றம் அளித்தார். ஆனாலும் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

  இதேப்போன்று வட்டு எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்னை கமல்பிரீத் கவுர் பதக்கம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது. இன்று நடைபெறும் வட்டு எறிதல் இறுதி போட்டியை பலர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

  Also Read : சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர்- ஒலிம்பிக்கில் முதல் முறை

  இந்தியாவின் இன்றையப் போட்டிகள்

  தடகளம்
  காலை 7.24 : பெண்கள் 200 மீ சுற்றில் டியூட்டி சந்த் தோல்வி

  துப்பாக்கி சூடுதல்
  காலை 8 மணி : 50 மீ ரைபிள் 3 நிலைகள் ஆண்கள் தகுதி. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் இறுதிபோட்டிக்கு முன்னேறாமல் வெளியேறினர்

  ஹாக்கி
  காலை 8.30 மணி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

  குதிரையேற்றம்
  மதியம் 1.30 : தனிநபர் தகுதி சுற்று - ஃபுஆத் மிர்சா பங்கேற்பு

  வட்டு எறிதல்
  மாலை 4.30 : பெண்கள் வட்டு எறிதல் இறுதி போட்டி - இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் பங்கேற்பு

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: