டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் உட்பட 7 பதக்கங்கள்: வரலாறு படைத்த வீராங்கனை

ஆஸி. நட்சத்திர நீச்சல் வீராங்கனை ஏம மெக்கியன்.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நீச்சப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏம மக்கியன் 4 தங்கம் உள்ளி்ட்ட 7 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

 • Share this:
  டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் நீச்சப் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏம மக்கியன் 4 தங்கம் உள்ளி்ட்ட 7 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

  நீச்சல் பிரிவில் ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை எனும் சாதனையையும் ஏம மக்கியன் படைத்தார். 400 மீட்டர் ரிலே நீச்சல் பிரிவில் 2 முறை நடப்பு சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

  Also Read: Tokyo Olympics| வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி: முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்குத் தகுதி

  400 மீட்டர் நீச்சல் ரிலே போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கெய்லே மெக்வோன், செல்ஸி ஹாட்ஜஸ், ஏம மக்கியன், கேட் கேம்பெல் 3:51:60 மைக்ரோ வினாடிகளில் பந்தைய தொலைவைக் கடந்து தங்கம் வென்றனர்.

  Also Read: Indian Hockey| சவிதா பூனியா; ஆஸ்திரேலியாவின் கனவுகளை முறியடித்த புதிய சுவர்

  டோக்கியோ ஒலிம்பிக்கில் பெறும் 7-வது பதக்கம் இதுவாகும். இதற்கு முன், 100மீ ப்ரீ ஸ்டைல், 400மீட்டர் ப்ரீ ஸ்டைல் ரிலே,400மீ மெட்லே ரிலே நீச்சல், 50மீ ப்ரீஸ்டைல் ஆகியவற்றில் மெகான் தங்கம் வென்றார். கலப்பு இரட்டையர் 400மீமெட்லே ரிலே, 100மீ ஃபட்டர்ப்ளை, 800மீ ப்ரீஸ்டைல் ஆகியவற்றில் வெண்கலப்பதக்கத்தையும் ஏம மக்கியன் வென்றார்.

  1952ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோ 6 பதக்கங்களையும், 2008ல் அமெரிக்க வீராங்கனை நடாலி காப்லின் ஆகியோர் மட்டுமே ஒரே ஒலிம்பிக்கில் 6பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தனர். ஆனால் ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இவர்களின் சாதனையை ஏம மக்கியன் முறியடித்துள்ளார்.

  முன்னதாக அமெரி்க்க நீச்சல் வீராங்கனை கேட்டி லெடக்கி 6-வது தங்கப்பதக்கத்தையும் 800மீ ப்ரீ ஸ்டைல் பிரிவில் வென்றார். இது அவருக்கு ஒட்டுமொத்த ஒலிம்பிக்கில் வெல்லும் 10-வது பதக்கமாகும். 800மீ ப்ரீஸ்டைல் பிரிவில் கேட்டி லெடக்கி இதுவரை யாராலும் தோற்கடிக்க முடியாத வீராங்கனையாக 11 ஆண்டுகளாக வலம் வருகிறார். 800 மீ ப்ரீஸ்டைல் போட்டியில் இந்த முறை 8:12:57 மைக்ரோ வினாடிகளில் தொலைவைஎட்டி கேட்டி லெடக்கி தங்கம் வென்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 14 தங்கம் 3 வெள்ளி 14 வெண்கலம் வென்று 31 பதக்கங்களுடன் 4ம் இடத்தில் இருக்கிறது. 24 தங்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 20 தங்கம் உட்பட மொத்தம் 53 பதக்கங்களுடன் அமெரிக்கா 2ம் இடத்திலும், 17 தங்கம் உட்பட 31 பதக்கங்களுடன் ஜப்பான் 3ம் இடத்திலும் உள்ளன.
  Published by:Muthukumar
  First published: