• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics | மிக்சட் டீம் வில்வித்தை: தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் காலிறுதிக்குத் தகுதி

Tokyo Olympics | மிக்சட் டீம் வில்வித்தை: தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் காலிறுதிக்குத் தகுதி

தீபிகா குமாரி

தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் கலப்பு அணி வில்வித்தை பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் ஜோடி காலிறுதிக்குத் தகுதி பெற்றனர்.

  • Share this:
    சைனீஸ் தைபே அணியை இந்திய வீரர்கள் 5-3 என்று வீழ்த்தினர். பின்னடைவைலிருந்து முன்னேறி வெற்றி கண்டது தீபிகா, ஜாதவ் ஜோடி. தீபிகா குமாரி, ஜாதவ் இருவரும் சேர்ந்து ஆடுவது இதுவே முதல் முறை.

    1-3 என்று பின் தங்கிய நிலையிலிருந்து அபார வெற்றி பெற்றனர்.

    ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்த கலப்பு அணி வில்வித்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரவீன் ஜாதவ் தன் அம்பை பிரமாதமாக ரிலீஸ் செய்தார். தீபிகா குமாரியின் அபார ஆட்டம் இந்திய அணியை பின்னடைவிலிருந்து எழுந்து முன்னிலை பெற்று வெற்றிபெற வைத்தது.

    Also read: Tokyo Olympics| இந்தியா அபார வெற்றி: ஹாக்கியில் நியூசிலாந்தை 3-2 என்று வீழ்த்தியது

    முதலில் தீபிகா குமாரி தன் கணவர் அதானுவுடன் இந்தப் போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரவின் ஜாதவ் சக வீரர்களை விடவும் பிரமாதமாக ஆடி இந்த மிக்சட் டீம் ஈவண்டில் பங்கு பெற்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்றைய போட்டியில் சைனீஸ் தைபே ஜோடியிடம் 1-3 என்று இந்திய அணி பின் தங்கியிருந்தது. முதல் செட்டில் 1 புள்ளியில் தீபிகா-பிரவின் ஜோடி கோட்டை விட்டது. தகுதி பெற 3வது செட்டை வெற்றி பெற வேண்டிய நிலை. ஆனால் இருவரும் அருமையாக ரிலீஸ் செய்து இலக்கை தாக்கி வெற்றி பெற்றனர்.

    இவர்கள் காலிறுதியில் டாப் தரவரிசையில் உள்ள கொரியா ஜோடிக்கும் பங்களாதேஷ் ஜோடிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் வெல்பவர்களை எதிர்கொள்வாரக்ள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: