Tokyo Olympics | வில்வித்தை: தீபிகா குமாரி-பிரவீன் ஜாதவ் ஜோடி ஏமாற்றம்- கொரியாவிடம் வீழ்ந்தனர்

தீபிகா குமாரி-ஜாதவ்

ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஆண்-பெண் இரட்டையர் வில்வித்தை ஜோடி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.

  • Share this:
    ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட ஆண்-பெண் இரட்டையர் வில்வித்தை ஜோடி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.

    கொரியாவின் ஆன் சான், கிம் ஜே டியோக் ஜோடியிடம் இந்தியாவின் தீபக் குமாரி, பிரவீன் ஜாதவ் ஜோடி 2-6 என்ற செட்களில் தோற்று ஏமாற்றமளித்தனர்.

    Also Read: Tokyo Olympics| முதல் தங்கம் வென்றது சீனா: துப்பாக்கிச் சுடுதலில் சீன வீராங்கனை சாதனை

    ஆனால் முதல் 2 செட்களில் 0-4 என்று தீபிகா-ஜாதவ் ஜோடி பின்னடைவு கண்டது, ஆனால் அதன் பிறகு எழுச்சி பெற்று 2-4 என்று முன்னுக்கு வந்தது. ஆனால் இந்த கொரிய ஜோடியை வீழ்த்துவது கடினம் இவர்கள் தங்கம் வெல்லும் ஜோடி என்று கணிக்கப்பட்டவர்கள், ஆகவே கொரியாவின் ஆன் சான், கிம் ஜே டியோக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    காலிறுதியில் பின் தங்கிய நிலையில் சைனீஸ் தைபே ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றனர் தீபிகா-ஜாதவ் ஜோடி. சரி பதக்கம் வரை செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவான கொரியா ஜோடியிடம் போராடித் தோல்வி கண்டனர் தீபிகா-ஜாதவ்.

    Also Read: Tokyo Olympics | 10மீ ஏர்பிஸ்டல் இறுதிக்கு இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி தகுதி- பதக்கம் வெல்ல வாய்ப்பு

    ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் கோவிட் காலத்தில் மீண்டு சுயமாகப் பயிற்சி செய்து இந்த அளவுக்கு வந்தது பாராட்டத்தக்கதே.
    Published by:Muthukumar
    First published: