Tokyo Olympics: வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி: த்ரில் போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தினார்

தீபிகா குமாரி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி படுதிரில்லான போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை செனியா பெரோவாவை 6-5 என்று வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி முன்னேறினார். காலிறுதிப் போட்டி இன்று 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி படுதிரில்லான போட்டியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீராங்கனை செனியா பெரோவாவை 6-5 என்று வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

    உலகின் நம்பர் 1 வீராங்கனையான தீபிகா குமாரிக்கு தரவரிசை 8-ல் இருக்கும் ரஷ்ய வீராங்கனை பெரோவா டஃப் கொடுத்தார். ஆனால் கடைசியில் தீபிகா குமாரி 10 புள்ளிகள் மைய இலக்கை தன் அம்பால் தாக்க வெற்றி சாத்தியமானது, ரஷ்ய வீராங்கனை முக்கியமான கட்டத்தில் 7 புள்ளிகளை தாக்கி சோடை போனார்.

    வில்வித்தைப் போட்டிகள் நடைபெறும் யுமெனோஷிமா பார்க்கில் காற்று பயங்கரமாக வீசும் என்பதால் போட்டியாளர்களுக்கு எப்பவுமே கடினம்தான்.

    Also Read: Tokyo Olympics | ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் இன்றைய (ஜூலை 30) போட்டிகள்

    தீபிகா குமாரி முதலில் 4-2 என்று முன்னிலை பெற்றிருந்தார் ஆனால் பெரோவா பிரமாதமான சில அம்பு ரிலீஸ்களைச் செய்து 5-5 என்று சமன் செய்தார். கடைசியில் அந்த 10 புள்ளிகள் மைய இலக்கை குறிவைத்து தாக்கினார் தீபிகா இதனால் த்ரில் வெற்றி கிடைத்தது, காலிறுதிக்கு முன்னேறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    4வது செட்டில் இருவருமே 26 புள்ளிகள் என்று டை செய்தனர். 5வது செட்டில் தீபிகா குமாரி 25 புள்ளிகளை எடுக்க பெரோவா 28 புள்ளிகளை எடுத்தார், இதனால் 5-5 என்று டை ஆக ஷூட் அவுட் முறைக்குச் சென்றது அதில் தீபிகா 10 புள்ளிகள் மைய இலக்கை துல்லியமாக தாக்க, ரஷ்யாவின் பெரோவா 7 புள்ளிகளையே எடுத்தார், இதனால் தோல்வி தழுவினார்.

    இன்று காலை 11:30 மணிக்கு கொரிய வீராங்கனை ஆன் சான் என்பவரை காலிறுதியில் சந்திக்கிறார்.
    Published by:Muthukumar
    First published: