டோக்கியோ ஒலிம்பிக் வெண்ககப்பதக்க ஆடவர் ஹாக்கி போட்டீயில் நேற்று பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கி பதக்கம் வென்றது. இது கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்ரீஜேஷ் கடைசி விநாடியில் ஜெர்மனியின் கோல் நோக்கிய ஷாட் ஒன்றை தடுத்த போது வரலாறு படைத்தது இந்திய ஹாக்கி அணி. மீண்டும் இந்தியாவில் ஹாக்கி புத்துயிர் பெற்றுள்ளது, இன்று மகளிர் ஹாக்கி அணி பிரிட்டனிடம் 4-3 என்று தோற்றாலும் கெத்தாக ஆடி மகிழ்ச்சியளித்தனர் , 4ம் இடத்தில் முடிந்தனர்.
33 வயது ஸ்ரீஜேஷ் உடையாத ஒரு சுவராக நின்றார், வென்றார். ஸ்ரீஜேஷ் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார். இப்போது கேரளா கல்வி த் துறையில் தலைமை விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் ஸ்ரீஜேஷ்.
நேற்றைய வெற்றிக்குப் பிறகு ஸ்ரீஜேஷ் வீட்டில் இருந்த அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகள் பரிமாறி கொண்டாடினார்.
ஸ்ரீஜேஷின் தாயார், “வெண்கலம் என்பது தங்கத்துக்குச் சமம், இது ஸ்ரீஜேஷின் 3வது ஒலிம்பிக், முதல் 2 ஒலிம்பிக் முடிந்து வெறுங்கையுடன் திரும்பினான். இந்த தடவை பதக்கத்துடன் வந்துள்ளான். இது வெண்கலம் என்றாலும் எங்களைப் பொறுத்தவரை வெண்கலம் தங்கத்துக்குச் சமம். அதாவது தங்கப் பதக்கம் வென்றதற்குச் சமமானதே” என்றார்.
நேற்று ஸ்ரீஜேஷ் வீட்டில் ஒரு கூட்டம் தொலைக்காட்சி பெட்டியின் முன் ஆர்வத்துடன் வந்து அமர்ந்து ஒவ்வொரு நகர்வையும் கைதட்டி ரசித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஸ்ரீஜேஷ் மனைவி அனீஷா ஒரு ஆயுர்வேத மருத்துவர். அவராலும் வெற்றி பெற்ற பிறகு உணர்வுகளை அடக்க முடியவில்லை. ஸ்ரீஜேஷின் ஆசையே ஒலிம்பிக் பதக்கம் வெல்வதுதான், “அவரது ஆசைக்கு ஏற்ப இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வென்றது. எங்களால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுவும் ஸ்ரீஜேஷ் என்னை போனில் அழைத்தார், இது இன்னமும் எங்கள் மகிழ்ச்சியை அதிகப்படுத்தியது.” என்றார்.
ஸ்ரீஜேஷின் தந்தை “அனைவரது பிரார்த்தனைக்கும் நன்றி, அனைவரின் பிரார்த்தனையினால்தான் இது சாத்தியமானது” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.