டோக்கியோ ஒலிம்பிக் : ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்

குத்துசண்டை வீரர் சதீஷ்குமார்

ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீரர் சதீஷ் குமார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் சூப்பர் ஹெவி வெயிட் பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

  டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் குத்துச்சண்டை 91+ கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ் குமார் பங்கேற்றார். இரண்டாவது சுற்றில் ஜமைக்கா வீரர் ரிகார்டோ ப்ரோவூனை எதிர்த்து அவர்விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில் சிறப்பாக சதீஷ்குமார் சண்டை செய்தார்.

  Also Read : டோக்கியோ ஒலிம்பிக் : பி.வி. சிந்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதி

  அதேபோல் இரண்டாவது ரவுண்டிலும் அவர் சிறப்பாக சண்டையிட்டு ஜமைக்க வீரரின் முயற்சிகளை தடுத்தார். முதல் இரண்டு ரவுண்ட் சதீஷ் குமாருக்கு சாதகமாக அமைந்தது. இதனால் மூன்றாவது ரவுண்டில் ஜமைக்கா வீரர் இந்திய வீரரை நாக் அவுட் செய்ய முயன்றார். அதை சதீஷ் குமார் சிறப்பாக எதிர்கொன்டார். இறுதியில் 4-1 என்ற கணக்கில் சதீஷ்குமார் வென்றார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் அவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  காலிறுதிச் சுற்றில் வெற்றி பெறும் பட்சத்தில் அவரும் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்வார். ஒலிம்பிக் குத்துச்சண்டை வரலாற்றில் ஆடவர் சூப்பர் ஹேவி வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் சதீஷ் குமார் பெற்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: