• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிங்கப் பெண் லவ்லினா! மேரி கோமுக்குப் பிறகு சாதனை மங்கை கடந்து வந்த பாதை

சிங்கப் பெண் லவ்லினா! மேரி கோமுக்குப் பிறகு சாதனை மங்கை கடந்து வந்த பாதை

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலம் வென்ற சிஙக்ப்பெண் லவ்லினா

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலம் வென்ற சிஙக்ப்பெண் லவ்லினா

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய நட்சத்திரம் மேரி கோமுக்குப் பிறகு ஒலிம்பிக் வெண்கலம் வென்று புதிய நட்சத்திரமானார் அசாமைச் சேர்ந்த இந்திய சிங்கப்பெண் லவ்லினா போர்கோஹெய்ன்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டையில் இந்திய நட்சத்திரம் மேரி கோமுக்குப் பிறகு ஒலிம்பிக் வெண்கலம் வென்று புதிய நட்சத்திரமானார் அசாமைச் சேர்ந்த இந்திய சிங்கப்பெண் லவ்லினா போர்கோஹெய்ன்.

    அரையிறுதியில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலியிடம் 0-5 என்று தோற்றாலும் முதல் 2 செட்களில் 5 ஜட்ஜ்களின் தீர்ப்பின் படி 1 புள்ளிதான் அவரை விட குறைவாக எடுத்தார் லவ்லினா. ஏற்கெனவே வெண்கலம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இதில் வென்று தங்கம், அல்லது வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிரில் ஆடியது உலக சாம்பியன் துருக்கி வீராங்கனை. அவருக்குச் சரியாக இவரும் பஞ்ச் கொடுத்தாலும் அவரது துல்லியத்தை இவரால் எட்ட முடியாமல் போனதே துரதிர்ஷ்டம்.



    23 வயதாகும் லவ்லினா உலக சாம்பியன் நியன் சின் சென் என்ற தய்வான் வீராங்கனையை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த போது இந்தியாவுக்கு பதக்கம் உறுதி செய்து சாதனை புரிந்தார்.

    Also Read: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

    அரையிறுதியில் 2வது சுற்றில் லவ்லினா 2 முறை எச்சரிக்கப்பட்ட பிறகு நடுவரின் உத்தரவுகளை கவனிக்காமல் இருந்ததால் ஒரு புள்ளி குறைக்கப்பட்டது. சர்மெனேலிக்கு எதிராக வலுவான முறையில்தான் நின்றார் லவ்லினா.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த லவ்லினா மேரி கோம் 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற பிறகு இப்போது டோக்கியோவில் வெண்கலம் வென்ற 2வது இந்திய வீராங்கனையானார், விஜேந்தர் சிங் 2008-ல் குத்துச் சண்டை பதக்கம் வென்றதால் லவ்லினா ஒட்டுமொத்தமாக பாக்சிங் ஒலிம்பிக் பதக்கம் வென்ற 3வது இந்திய வீரர் ஆனார்.

    அசாமிலிருந்து முதல் முறையாக ஒலிம்பிக் தகுதி பெறும் வீராங்கனையாவார் லவ்லினா. இவர் இருமுறை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை வெண்கலம் வென்ற அனுபவமிக்கவர்தான்.

    அசாம் மாநிலம் கோலகாட் மாவட்டத்தின் போர்முக்கியா கிராமத்தைச் சேர்ந்தவர் லவ்லினா. டோக்கியோ ஒலிம்பிக் முதல் சுற்றில் இவருக்கு ‘பை’ கிடைத்தது. ஜெர்மனியின் நாதின் ஆபெட்ஸ் என்பவரை 3-2 என்று வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆபெட்ஸ் இவரை விட 12 வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இவரால் இவரது கிராமத்துக்கு மோட்டார் வாகனங்கள் செல்லக் கூடிய சாலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    லவ்லினா அக்டோபர் 2 , 1997-ல் பிறந்தார். இவரது மூத்த இரட்டையர் சகோதரிகள் லிச்சா மற்றும் லிமாவிடமிருந்து தூண்டுதல் பெற்றார். இவர்கள் இருவரும் தேசிய மட்டத்தில் குத்துச் சண்டையில் விளையாடியவர்கள்.

    லவ்லினா படித்த பர்பத்தார் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையம் நடத்திய போட்டிகளின் போது பாதும் பொரோ என்பவரால் லவ்லினா அடையாளம் காணப்பட்டார்.

    லவ்லினா பெற்றோருக்கு ஆண் வாரிசு இல்லை என்று கிராம மக்கள் அவர்கள் மீது பரிவு காட்டி வந்தனர். ஆனால் இப்போது சிங்கப்பெண்ணாக ஒலிம்பிக் பதக்கம் வென்று நாட்டுக்கும் வீட்டுக்கும் ஊருக்கும் புகழ் சேர்த்துள்ளார் லவ்லினா.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்ற 3 பேரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: