ஒலிம்பிக் வாள்வீச்சுப் போட்டியில் பங்கேற்ற தருணத்தை, 15 ஆண்டுகால கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக கருதுவதாக தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார். டோக்யோவிலிருந்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், இந்த விளையாட்டுப் பிரிவை தான் தேர்ந்தெடுத்தது குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்தப்பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. இது மிக நீண்ட பயணமாக இருந்தது. அதேசமயம் கொஞ்சம் கடினமாகவும் இருந்தது. அது எல்லாம் இந்த ஒலிம்பிக் போட்டியில் நான் விளையாடும் போது அவை மிகவும் பயணுள்ளதாக இருந்தது. நிறைய பேர் உனக்கு இந்த விளையாட்டு வேண்டாம் என அட்வைஸ் பண்ணாங்க. வேற வேலைக்கு போன்னு கூட சொன்னாங்க. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற போது நான் என் வாழ்க்கையில் சரியான முடிவை எடுத்திருக்கிறேன் என நினைத்தேன். என் பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததற்கான பலன் கிடைத்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhavani Devi, Fencing\, Tokyo Olympics