Tokyo Olympics | டோக்கியோ ஒலிம்பிக் நடக்குமா?அதிகரிக்கும் கொரோனா; தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் 2021

டோக்கியோவில் ஒரு தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறுமா என்பதில் ஐயம் எழுந்துள்ளது.

  • Share this:
    டோக்கியோவில் ஒரு தடகள வீரர் உட்பட 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதால் ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறுமா என்பதில் ஐயம் எழுந்துள்ளது.

    ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு தடகள வீரர், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆறு பேரின் அடையாளம் குறித்து அவர்கள் கூடுதல் விவரங்களை வழங்க மறுத்தனர்.

    ஏற்கனவே இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்று உள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் ஒலிம்பிக் போட்டி வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ரஷியாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஜூலை 1 முதல் ஜப்பானுக்குள் நுழைந்த 8,000 க்கும் மேற்பட்டவர்களிடையே இதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

    டோக்கியோவில் தற்போது அவசர நிலை பிறபிக்கப்பட்டு உள்ளது, அங்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. நகரத்தில் நேற்று மட்டும் 1,149 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரேசில் ஜூடோ அணியினருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. டோக்கியோ விடுதி ஊழியர் ஒருவருக்கும் இவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது.

    இது தவிர 16 தடகள வீரர்கள் அடங்கிய குழு, 10 ஊழியர்கள் டோக்கியோ விமான நிலையத்தில் ஜூலை 10ம் தேதி வந்திறங்கினர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    Published by:Muthukumar
    First published: