• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்

வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன்

வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி தழுவினாலும் இந்தியாவுக்காக இன்னொரு பதக்கமாக வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச் சண்டை அரையிறுதியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் தோல்வி தழுவினாலும் இந்தியாவுக்காக இன்னொரு பதக்கமாக வெண்கலம் வென்று சாதனை படைத்தார்.

    அரையிறுதியில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி 5-0 என்று வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். ஆனால் போராடி தோல்வி கண்ட லவ்லினா வெண்கலப்பதக்கம் வென்றார்.

    காலிறுதியில் அபார வெற்றி பெற்ற பிறகே வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார் லவ்லினா, இருந்தாலும் இவரது திறமைக்கு தங்கம் அல்லது வெள்ளி வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் உலக சாம்பியன் வீராங்கனையிடம் அரையிறுதியில் போராடி தோல்வி தழுவினார் லவ்லினா. இதன் மூலம் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய ஒலிம்பிக் வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்றார்.

    இதையும் படிங்க: ஒலிம்பிக் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 2வது பதக்கம் உறுதி - வரலாறு படைத்தார் லவ்லினா போர்கோஹெய்ன்!

    இதன் மூலம் இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் 2 வெண்கலம், ஒரு வெள்ளியுடன் 3 பதக்கங்கள் பெற்றுள்ளது. மீராபாய் சானு பளுத்தூக்குதல் வெள்ளி, பி.வி.சிந்து பாட்மிண்டன் வெண்கலம் ஆகியவற்றை அடுத்து லவ்லினா என்ற 3வது பெண் இந்தியாவுக்கு இன்னொரு வெண்கலம் வென்று தந்துள்ளார். வெல்ட்டர் வெய்ட் 69 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார் லவ்லினா போர்கோஹெய்ன்.

    அரையிறுதி முதல் சுற்றில் துருக்கி வீராங்கனை புசெனாஸ் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்தும் 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருக்கமாக வந்தார். இரண்டாவது சுற்றிலும் அதே போல் சர்மெனேலி 5 ஜட்ஜ்களிடமிருந்து 10 புள்ளிகள் பெற லவ்லினா 9 புள்ளிகள் பெற்று நெருங்கி வந்து தோற்றார். அடுத்த சுற்றில் துருக்கி வீராங்கனை சர்மெனேலி மீண்டும் 10 புள்ளிகளை அனைத்து ஜட்ஜ்களிடமிருந்து பெற லவ்லினா 9,9,9, 8,8 என்று பெற்று பின் தங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனையடுத்து 0-5 என்று தோல்வி தழுவினாலும் வெண்கலம் வென்றார் லவ்லினா.

    லவ்லினா போர்கோஹெய்ன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: