ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் தகுதி - வீரர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என அமைச்சர் உறுதி

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில், தமிழக வீரர்கள் 5 பேர் உள்பட 26 வீரர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    வருகிற 23ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் தடகள பிரிவுக்கான போட்டிகள் ஜுலை 31ம் தேதி தொடங்குகின்றன.

    இந்தநிலையில் இந்திய தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் 26 வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    இதில் பெண்கள் நூறு மற்றும் 200 மீட்டர் பிரிவில் டூட்டி சந்த், மிக்சட் 400 மீட்டர் relay-வில் தமிழகத்தைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் மற்றும் ரேவதி வீரமணி உள்ளிட்ட 9 வீராங்கனைகள் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளது.

    அதேபோல ஆண்கள் தடகள பிரிவில் நட்சத்திர வீரர் குருப்ரீத் சிங், தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி உள்பட மொத்தம் 17 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

     

    இதனிடையே, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.
    Published by:Yuvaraj V
    First published: