டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது.

 • Share this:
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்கியது. இதில், பங்கேற்க இந்தியா சார்பில் 125 வீரர்- வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக்கின் 9-வது நாளான இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. வட்டு எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்னை கமல்பிரீத் கவுர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.

  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தற்போது வரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். மகளிர் ஒற்றையர் டென்னிஷில் பி.வி.சிந்து வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து இந்தியா ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கம் வென்று பட்டியலில் 61-வது இடத்தை பெற்றுள்ளது.

  Also Read : சக வீரருடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்த கத்தார் வீரர்- ஒலிம்பிக்கில் முதல் முறை

  பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 24 தங்கம், 15 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களை சீனா அள்ளி உள்ளது. அமெரிக்கா 20 தங்கம், 24 வெள்ளி மற்றும் 16 வெண்கல பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்த இடங்களை பிடித்து உள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: