Tokyo Olympics 2020 | இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்த இளவேனில் வாலறிவன், அபுர்வி சந்தேலா

elavenil valarivan

தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவனும், தங்கப்பதக்கம் வெல்ல அதிகபட்ச வாய்ப்புள்ளவராக கருதப்பட்ட சந்தெல்லா அபுர்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • Share this:
ஒலிம்பிக் போட்டித்தொடரின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனையான இளவேனில் வாலறிவன், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போயிருப்பது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டித் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பெருந்தொற்று பரவலுக்கு இடையே ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு ஜப்பானிலேயே எதிர்ப்பு கிளம்பிய போதிலும் திட்டமிட்டபடி நேற்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் திருவிழா தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 18 வகையான விளையாட்டுக்களில் 125 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் அடங்குவர்.

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச் சுற்று போட்டிகள் இன்று காலை 5 மணிக்கு தொடங்கின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவனும், தங்கப்பதக்கம் வெல்ல அதிகபட்ச வாய்ப்புள்ளவராக கருதப்பட்ட சந்தெல்லா அபுர்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read:   மேரிகோம், பி.வி.சிந்து, நீரஜ் சோப்ரா - ஒலிம்பிக்கில் தங்க வேட்டைக்கு காத்திருக்கும் வீரர்கள் யார் யார்?

இதில் கலந்து கொண்ட இரு வீராங்கனைகளுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கிறார்கள். குறிப்பாக இப்பிரிவில் உலக சாதனை புரிந்த அபுர்வி 621.9 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏமாற்றினார். இதே போல வாலறிவன் 626.5 புள்ளிகள் எடுத்திருந்தார். அபுர்வியைக் காட்டிலும் வாலறிவன் அதிக புள்ளிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு ஏமாற்றம் மிஞ்சியிருந்தாலும் வில்வித்தை போட்டியில் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீனத்தை பே-க்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ் இணை 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது.
Published by:Arun
First published: