Tokyo Olympics 2020 : டோக்கியோ ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தின் இந்திய மதிப்பு எவ்வளவு தெரியுமா?

olympic gold medal

இந்தியாவில் தங்கத்தின் தற்போதைய விலையின்படி, இந்த எடையை வைத்து பார்த்தால் ஒரு தடகள வீரர் வெல்லும் தங்கப் புத்தகத்தின் மதிப்பு ரூ. 26 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பதக்கங்கள் அவ்வளவு விலை போகாது.

  • Share this:
கடந்த ஆண்டு நடக்க வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. மேலும் போட்டிகளை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து போட்டிகளின் சீரான செயல்பாட்டிற்கு கொரோனா வைரஸ் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு விளையாட்டு வீரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுகளில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பல ஆண்டுகளாக தங்களை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற தகுதி பெறுவது என்பதே வீரர்களுக்கு ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. அதிலும், ஒரு வீரர் தங்கப்பதக்கம் வென்றால், உலக வரலாற்றில் தனது பெயரை அவர் பதிவு செய்யும் பெருமையை பெறுகிறார் என்று அர்த்தம். இது அவருக்கும் பெருமை அவரது நாட்டிற்கும் பெருமை.

Also Read:  மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயலால்... நெட்டிசன்கள் கொந்தளிப்பு

இது ஒருபுறம் இருக்க ஒலிம்பிக் போட்டியில் விளையாட்டு வீரர்கள் வெல்லும் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தின் விலை குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போட்டியில் வழங்கப்படும் தங்கம் எவ்வளவு மதிப்புடையது? அது முழுவதும் தங்கம் தானா என்று யாருக்காவது தெரியுமா? பொதுவாக டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்க பதக்கங்கள் முழுவதும் தங்கமாக இருக்காது. இந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முறையாக பதக்கங்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய மின்னணு கேஜெட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

olympic gold medal


இந்த கேஜெட்டுகள் ஜப்பானில் வசிப்பவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகவும் பதக்கங்களை தயாரிப்பதற்காக சுமார் 6.21 மில்லியன் பழைய மொபைல் போன்களை நன்கொடையாக அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 78,985 டன் எடை கொண்ட கேஜெட்களை கடந்த 2 ஆண்டுகளில் நன்கொடையாக பெற்றதாக ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதவிர தங்கப்பதக்கம் செய்ய மொத்தம் 32 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டது.

Also Read:  ‘தல அஜித் சாருக்கு நன்றி’: சார்பட்டா பரம்பரை நடிகரின் உணர்ச்சிமிகு இன்ஸ்டா பதிவு!

பொதுவாக, ஒலிம்பிக் போட்டியில் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் ஆகும். வெள்ளிப் பதக்கம் 550 கிராம் எடையும், வெண்கலம் 450 கிராம் எடையும் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் தற்போதைய விலையின்படி, இந்த எடையை வைத்து பார்த்தால் ஒரு தடகள வீரர் வெல்லும் தங்கப் புத்தகத்தின் மதிப்பு ரூ. 26 லட்சத்துக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பதக்கங்கள் அவ்வளவு விலை போகாது. ஒரு வீரர் தனது தங்கப் பதக்கத்தை விற்கச் சென்றால், அவருக்கு ரூ .65,790 மட்டுமே கிடைக்கும்.

இப்போது நீங்கள் நினைக்கலாம், ஒரு தங்கப் பதக்கத்தின் எடை 556 கிராம் என்றால், ஏன் இவ்வளவு விலை குறைவாக உள்ளது என்று? 556 கிராம் எடை கொண்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில், 6 கிராம் தங்கமும் 550 கிராம் வெள்ளியும் மட்டுமே உள்ளது. எனவே, தங்கத்தின் மதிப்பு ரூ.28,500 ஆகவும், பதக்கத்தில் உள்ள வெள்ளி இந்தியாவில் தற்போதைய விலைக்கு ஏற்ப ரூ.37,290 ஆகவும் கிடைக்கும். எனவே, தங்கப் பதக்கத்தின் மொத்த விலை ரூ .65,790 ஆக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதவிர டோக்கியோ ஒலிம்பிக் 2021-ல், இந்த பதக்கங்கள் சிறப்பு பெட்டியில் வழங்கப்படும் வேண்டும் கூறப்பட்டுள்ளது. இந்த பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்ட சிறப்பு ஷெல்லில் வழங்கப்படும். ஜப்பானிய வடிவமைப்பாளர்களால் பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புகளை ஒன்றிணைத்து ஷெல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும் வெவ்வேறு முறை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: